பனங்கற்கண்டு பற்றி தெரியுமா? இந்த பிரச்சனைகளே வராது

1017

மருத்துவக் குணம் வாய்ந்த பொருட்களின் ஒன்றான பனங்கற்கண்டு, நிறைய சர்க்கரை படிகக் கற்கள் கலந்த, சுத்திகரிக்கப்படாத சர்க்கரை ஆகும்.

கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் இந்த பனங்கற்கண்டில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்றவை அதிகமாக உள்ளது.
பனங்கற்கண்டின் அற்புத மருத்துவ நன்மைகள்

பனங்கற்கண்டை வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்க வேண்டும். இதனால் சளி, இருமல் மற்றும் தொண்டைக் கரகரப்பு, போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வுகள் கிடைக்கும்.

சிறிதளவு சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால், கடுமையான வாய் துர்நாற்றம் போய்விடும்.

1/2 டேபிள் ஸ்பூன் பசு மாட்டு நெய்யுடன், சிறிதளவு பனங்கற்கண்டு மற்றும் நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால், உடல் சோர்வுகள் நீங்கி, சுறுசுறுப்புத் தன்மை அதிகரிக்கும்.

2 பாதாம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு, 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் ஆகியவற்றை பொடி செய்து, அதை பாலுடன் கலந்து குடித்து வந்தால், தீராத சளி பிரச்சனைகள் உடனே குணமாகும்.

1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால், தொண்டை வலி குணமாகும்.

சிறிதளவு பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் ஆகிய அனைத்தையும் சேர்த்து, இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வர வேண்டும். இதனால் நினைவாற்றல், கண்பார்வை அதிகரிக்கும்.

பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களின் தாக்கத்தை தடுக்கலாம்.

2 டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்த்து வாரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால், சிறுநீரகக் கற்கள் பிரச்சினை குணமாகும்.

SHARE