

உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதம் -முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்தில்!
வன்னிப்பெருநிலப்பரப்பில் மன்னர் ஆட்சிக்காலத்தில் இருந்து வழிபாட்டு வந்த தலங்களில் இன்றும் முதன்மையாக பிரசித்து பெற்று காணப்படும் முள்ளியவளை காட்டவிநாயகர் ஆலயம் 16 ஆம் நூற்றாண்டு காலத்தில் பரராச சேகர மன்னனால் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக வரலாற்று சான்றுகள் சொல்லி நிக்கின்றது.
மேலும் வரலாற்று சான்றுகளின் படி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ‘கந்தன்’ என்ற ஒரு பக்தன் வெள்ளையர் துரத்த இவ்வாலயத்திற்கு அருகில் இருந்த கொன்றை மரம் ஒன்றில் ஏறி ஒழிந்து கொண்டதாகவும், விநாயகரை வேண்டி ‘என்னைக் காட்டதே’ என்று துதிக்க வெள்ளையர் கண்ணுக்கு குளவிக்கூடாக தோன்றியதாகவும் கிராமத்தவர்கள் கூறக்கேட்கலாம்.
அதற்கு காணிக்கையாக கந்தன், மணி ஒன்றை செய்வித்து ஆலயத்திற்கு கொடுத்தான். அம்மணி இன்றும் ஆலயத்தில் ‘நினைவன் கந்தன்’ என்ற பெயர் தாங்கியவாறு காணப்படுகிறது.
இவ்வாறு பல வரலாற்றுக்களை கொண்ட முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயம் இன்றும் மக்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கின்றது.
இதன் சிறப்பு இன்னும் பல உண்டு உப்புநீரில் விளக்கெரியம் அற்புதமான காட்சி 7 நாட்கள் இந்த ஆலயத்தில் தான் இடம்பெறுகின்றது.
சிறப்பு வழிபாடுகள் காப்பு படித்தல் மடைபரவல் என வரலாற்றை சொல்லிநிக்கும் ஆலயத்தின் வைகாசி விசாக பொங்கல் நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
முதல் ஓர் திங்கட் கிழமை ஏழு வீடுகளில் பாக்குத்தெண்டி காட்டாவிநாயகர் ஆலயத்தில் வைப்பார்கள் பின்னர் அடுத்த திங்கட் கிழமை தீர்த்தம் எடுக்க செல்வார்கள்.
இந்த ஆலயத்தில் இருந்துதான் கடல் நீரில் தீர்த்தம் எடுகு;க செல்லுவார்கள் முல்லைத்தீவு தீர்த்தக்கரை எனும் இடத்தில் தீர்த்தம் எடுப்பார்கள்.
தீர்த்தம் எடுக்க செல்லும் போது தீர்த்தமெடுப்பவர் தன் வாயை வெள்ளைத் துணியால் கட்டியவாறு பறைமுழங்க நடந்து செல்வார்கள்.
சிலாவத்தைக் கடலிலேயே தீர்த்தம் எடுக்கப்படும். தீர்த்தமெடுப்பவருக்கு உதவியாக இருவர் பணியாற்றுவர். கடலில் இறங்கி கழுத்திற்கு மேல் நீர்வரைக்கும் சென்று நிற்பர்.
பாத்திரத்தைத் தோளில் தாங்கி வைத்திருக்கும் போதே கடல் அலை வந்து மூடும் போது பாத்திரம் நீரால் நிறைந்துவிடும்.
நீர் நிறைந்த பாத்திரத்தை அங்குள்ள மடையில் வைத்துப் பூசசை புரிந்தபின் மாலை ஆறுமணியளவில் அங்கிருந்து புறப்படுவர்.
அப்பொழுது கடற்கரை மண் சிறிதளவு எடுத்துத் துணியில் முடிந்துகொண்டு இன்னொருவர் செல்லத் தீர்ததக்குடம் வரும் வழிநெடுகிலும் மக்கள் பந்தலிட்டு மாவிலைத் தோரணம் இட்டு, நிறைகுடம் வைத்து வரவேற்பர். சிதறு தேங்காய் அடிப்பார்கள் பல ஆயிரக்கணக்கான சிதறு தேங்காய் உடைப்பார்கள்.
இந்த ஆண்டு பிரதேசத்தில் இன்னும் மழைபெய்யாத காரணத்தால் பிரதேசம் செழிக்க மக்கள் மழைவேணும் என்பதை உணர்த்தி வழிபாடுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தீர்த்தக்குடம் இறுதியில் இரவு காட்டுவிநாயகர் ஆலயத்தை சென்று அடைந்ததும் அங்கு விசேட பூசை நடைபெறும்.
இவ்வாறு ஒரு திங்கள் இரவு மடையுடன் பூசை நடைபெற்று அடுத்த புதன் மடை,அடுத்து வெள்ளிக்கிழமை மடை,என்று ஞாயிற்றுக்கிழமை பிள்ளையாருக்கும் அம்மனுக்கும் வளந்து நேர்ந்து பொங்கல் பொங்கி படைப்பார்கள் இந்த சிறப்புக்களுடன் அடுத்த நாள் திங்கட்கிழமைதான் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெறும் இங்கு எரிக்கப்பட்ட தீர்த்தத்தின் மீதி வற்றாப்பளை அம்மனுக்கு கொண்டு சென்று அங்கு வளந்து நேர்ந்து பொங்கல் பொங்குவார்கள் இதன் சிறப்பினை சொல்லிவிட முடியாது எழுதிவிட முடியாது நேரில் சென்று பார்வையிட்டால்தான் அம்மனின் அருளும் ஆசியும் கிட்டும் புதுமையையும் காண்பீர்கள்.
நன்றி.
எல்லாளன்.
https://www.facebook.com/kaaddavinayakarkovil?pnref=story