ஓய்வுபெறும் ஆங்கில பாட  உ.க.பணிப்பாளருக்கு பிரியாவிடை!

140
நேற்று 12 ஓய்வுபெற்ற   கல்குடா வலய  ஆங்கில பாட உதவிக்கல்விப்பணிப்பாளர்   கே.பாலச்சந்திரனுக்கு  பிரியாவிடைவைபவம் கிழக்குமாகாண கல்வித்திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
 
கிழக்குமாகாண ஆங்கில உதவிக்கல்விப்பணிப்பாளர் ஆசிரிய ஆலோசகர் நலன்புரி அமைப்பு நேற்று இவ்வைபவத்தை திருகோணமலையிலுள்ள தலைமையகத்தில் நடாத்தியது. இதன்பொது கிழக்ககு மாகாணத்தைச்சேர்ந்த ஆங்கியல பாட உ.க.பணிப்பாளர்கள் ஆசிரியஆலோசகர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
 
இப்பரியாவிடை நிகழ்வு  மாகாணக்கல்விப்பணிமனை கேட்போர்கூடத்தில் மாகாண உ.க.ப. ஆங்கிலம் திருமதி இன்திகா ஜெயலத் தலமையில் இடம்பெற்றது. 
 
நிகழ்வில்  செயலாளர் ஆங்கில உ.க.ப ஏ.ஆப்தீன்  கிழக்குமாகாண ஆங்கில உவிக்கல்விப்பணிப்பாளர்கள்  ஆசிரிய ஆலோசகர்கள் கலந்து சிறப்பித்தனர். 
 
நிகழ்வில்  உ.க.பணிப்பாளர்கள் கல்முனைவலயம் எம்.கே. கலீல் அக்கரைப்பற்றுவலயம் ஐனாப் அபுல்ஹசன் மட்டக்களப்புவலயம்   கே.சந்திரகுமாரன் ஆகியோர் அவரது சேகைள் பற்றி புகழந்து பாராட்டி சிறப்புரையாற்றினர்.ஓய்வுபெற்ற  கல்குடா  வலய  ஆங்கில பாட உதவிக்கல்விப்பணிப்பாளர்   கே.பாலச்சந்திரன் ஏற்புரை நிகழ்த்தினார்.