முள்ளியவளை துயிலுமில்லத்தில் பிரதான சுடரை மூத்த தளபதி மேஜர் பசீலனின் தாயார் தங்கம்மா ஏற்றுவார்

10075

 

முள்ளியவளை துயிலுமில்லத்தில் பிரதான சுடரை மூத்த தளபதி மேஜர் பசீலனின் தாயார் தங்கம்மா ஏற்றுவார்

தமிழீழவிடுதலைப்போராட்டத்தில் அடங்காப்பற்றின் மன்னன் பண்டாரவன்னியனின் வீரம்சுமந்து களமாடிய வீரர்களில் மூத்தவர் மூத்த தளபதிமேஜர்பசீலன் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரியவர்.இந்திய படைகள் ஈழ மண்ணை ஆக்கிரமித்திருந்தபோது தலைவருக்கு பக்கத்துணையாய் இருந்த அர்ப்பணிப்புமிக்க போராளி மூத்த தளபதிமேஜர் பசீலன்.தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் புரியாத புதிராகவும் இருந்த மாபெரும் வீரன் பிரகேடியர் பால்ராஜ் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்ள வழியாட்டியாய் இருந்தவர் பசீலன் என்பது குறிப்பிடத்தக்கது.அத்தகைய ஒரு வீரனின் தாயாரான நல்லையா தங்கம்மாவை தாயகத்தில் முல்லைத்தீவில் முள்ளியவளை அவரது இல்லத்தில் சந்தித்து முள்ளியவளை மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழுவினர் சந்தித்தபோது வறுமையிலும் அரசாங்கத்தின் பிச்சை சம்பளத்திலும் தன் வாழ்வை நடத்தும் அந்த தாயாரின் கண்களில் நீர்பெருகியுள்ளது.
தன் மகன் வீரச்சாவடைந்த பின் நினைவுகளை அவர் மீட்டிப்பார்க்கின்றார்.பால்ராஜும் தலைவரும் தலைவரும் தன்னை கவனித்ததையும் அவர்கள் இல்லாதுபின் தன்னை யாரும் கவனிப்பதில்லை என கண்ணீர்சொரிகின்றார்.இதுரை இராணுவம் விளக்கேற்றவிடாத சூழலால் தான் கவலையோடு இருந்ததாக கூறுகின்றார்.தற்பொழுது தனது ஏலாத இரண்டு பிள்ளைகளோடு வாழ்ந்துவருகின்றார்.எதிர்வரும் மாவீரர்நாளில்முள்ளியவளை துயிலுமில்லத்தில் பிரதான சுடரை மூத்த தளபதி மேஜர் பசீலனின் தாயார் தங்கம்மா ஏற்றுவார்

SHARE