தனக்குத்தானே பிரசவம் பார்த்த பெண்: புகைப்படத்தை நீக்கிய பேஸ்புக்!!

132

ஒரே மணி நேரத்தில் 10 ஆயிரம் லைக்ஸ் பெற்ற புகைப்படத்தை பேஸ்புக் நிர்வாகம் நீக்கியுள்ளது.

தைவான் நாட்டை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தையை வெளியே எடுக்கும் புகைப்படம் ஒன்று அண்மையில் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இந்த புகைப்படத்தை மருத்துவர் ஒருவரே தனது பேஸ்புக்கில் பதிவு செய்திருந்த நிலையில் பேஸ்புக் நிர்வாகம், இந்த புகைப்படம் ஆபாசம் என தெரிவித்து நீக்கியுள்ளது.

இதுகுறித்து குறித்த மருத்துவர் கூறியதாவது;

தனக்குத்தானே பிரசவம் பார்த்த அந்த பெண்ணின் மன தைரியத்தை பாராட்டுவதற்காகவும், மற்ற கர்ப்பிணி பெண்களுக்கு இதுவொரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என கருதி தான் பேஸ்புக்கில் பதிவேற்றியதாக தெரிவித்தார்.

ஆனால் இந்த புகைப்படத்தை ஆபாசம் என்று கூறி பேஸ்புக் நிர்வாகம் நீக்கியது துரதிஷ்டவசமானது என்றும் இந்த மருத்துவர் கூறியுள்ளார்.

இருப்பினும் இந்த புகைப்படம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த புகைப்படம் பேஸ்புக்கில் இருந்து நீக்குவதற்கு முன் ஒரே ஒரு மணி நேரத்தில் 10 ஆயிரம் லைக்குகளை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது.