பிள்ளையான்குழுவால் கற்பழிக்கப்பட்டுகொலை செய்யப்பட்ட மாணவியின் நினைவுநாள் அனுஸ்டிப்பு.

273

பிள்ளையான்குழுவால் கற்பழிக்கப்பட்டுகொலை செய்யப்பட்ட மாணவியின் நினைவுநாள் அனுஸ்டிப்பு

கருணா- பிள்ளையான் குழுவால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட பல்கலைக்கழகக் கலைப்பீட இறுதியாண்டு மாணவி தனுஷ்கோடி பிறேமினி அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கபட்டுள்ளது..
மட்டுநகர்.வாழைச்சேனை செங்கலடி படுவாங்கரை பிரதேசங்களில் மற்றும் களுவாஞ்சிகுடி.ஆரையம்பதி பிரதேசங்களில் பிள்ளையான் குழுவால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட தனுஷ்கோடி பிறேமினி அவர்களுக்கு
நீதி வேண்டி மக்களை அணிதிரளுமாறு துண்டுப்பிரசுரங்கள் ஓட்டப்படுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் கிழக்கில் ஆயுதமேந்திய தமிழ்க் குழுக்களால் மோசமாகப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட மூன்று இளம்பெண்கள் தொடர்பாக கேள்வியெழுந்துள்ளது. 2006 ஆண்டு ஜனவரி மாதம் 29 ம் நாளன்று இதே நாளில் தான் மட்டக்களப்புப் பல்கலைக்கழகக் கலைப்பீட இறுதியாண்டு மாணவி தனுஷ்கோடி பிறேமினி கருணா- பிள்ளையான் குழுவினரால் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குக்குள்ளாக்கப்பட்டபின் கோடரியால் வெட்டி க் கொல்லப்பட்டார் . வெலிக்கந்தைப் பகுதியில் இச் சம்பவம் நடைபெற்றது

1988 ம் ஆண்டு மட்டுநகரில் இந்தியப்படையினரின் துணையுடன் இயங்கி வந்த ஈ.பி. ஆர்.எல். எப் குழுவினரால் கைது செய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த ரிபாயா என்ற இளம் பெண் காணாமற் போனார். இவரையும் இவருடன் கூடச் சென்ற தமிழ்ப் பெண்ணையும் மோசமாகச் சித்திரவதைக்கு உட்படுத்தினர் ஈபி. ஆர். எல். எப்.பி னர் . இக் குழுவுக்குத் தலைமை தாங்கிய முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரத்தினமே இவர்களைக் கைது செய்திருந்தார். சித்திரவதையால் மயக்கமுற்ற தமிழ்ப்பெண் பிரசைகள் குழுத்தலைவர். அருட் தந்தை சந்திரா பெர்னாண்டோவின் முயற்சியால் மீட்டெடுக்கப்பட்டார். அவர் தற்போதும் உயிருடன் உள்ளார். இந்த விடயம் நீதிமன்றத்துக்குச் செல்வதாயின்சாட்சியமளிக்க அவர் தயாராகவுள்ளதாகத் தெரிய வருகிறது. வடகிழக்கு மாகாணசபையின் தவிசாளராகக் கடமையாற்றிய ராம் என்பவர் இந்த முஸ்லீம் யுவதி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பின்னரே படுகொலைசெய்யப்பட்டார் என தனது முகநூல் பதிவொன்றின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

01.12.1990. அன்று வின்சென்ட் மகளிர் உயர்தர பாடசாலை மாணவி அனுஷ்யா நல்லதம்பி டெலோ ஆயுததாரிகளால் கைதுசெய்யப்பட்டுக் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குப்பின் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டார். அக் காலத்தில் இக் குழுவுக்குப் பொறுப்பாக ஜனா (கோவிந்தன் கருணாகரம்) என்பவர் செயற்பட்டார்.

இம் மூன்று ஆயுதக்குழுக்களையும் வழிநடத்தியவர்களான பிள்ளையான் , இரா.துரைரத்தினம் , கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களாவர்.

எத்தனை தாய்மார் , சகோதரிகள் இவர்களுக்கு வாக்களித்தனரோ?

வடக்கில் வித்தியா என்றாலும் , கிருசாந்தி என்றாலும் மக்களின் கொந்தளிப்பு இருந்தது. குமார் பொன்னம்பலம் போன்ற வழக்கறிஞர்கள் நீதியின் கதவுகளைத் தட்டினர். தமிழரசுக் கட்சியின் செயலரும் சட்டத்தரணிதான். கோட்டைக்கழற்றும் போது மனச்சாட்சியையும் கூடக் கழற்றி விட்டார்களா ? என்ற பாணியில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இன்றைய தலைமுறை கேள்வி எழுப்பியுள்ளது

வித்தியாவுக்குக் கிடைத்த நீதி

அனுஷ்யா , ரிபாயா, பிறேமினி க்கும்!

செயலாற்ற முனைவோம் வாரீர் !!

ஒரு வித்தியாவுக்கு அநீதி இழைக்கப்பட்டபோது வீதியில் இறங்கி நீதி கேட்டனர் அங்குள்ள தமிழர்கள். இளைஞர் ,யுவதிகள் , கன்னியாஸ்திகள், அரசியல்வாதிகள் என அனைவருமே ஒன்றிணைந்து குரல் கொடுத்தனர். நாட்டின் ஜனாதிபதியே நேரில் வந்து வித்தியா குடும்பத்தினரைச் சந்தித்து நீதிகிடைக்கும் என்று நம்பிக்கை யூட்டினார். அதனைச் செயலிலும் காட்டினார்.

கிருசாந்திக்கு நடந்த கொடூரம் தொடர்பாக குரல் கொடுக்க குமார் பொன்னம்பலம் இருந்தார். அதன் விளைவாகச் செம்மணிப் படுகொலைகள் பற்றிய உண்மைகள் உலகத்துக்கு வெளிவந்தன. எதோ ஒரு வகையில் நீதி வழங்கியதாகக் காட்டவேண்டிய நிர்ப்பந்தம் உருவானது .

கிழக்கு வாழ் அன்புச் சகோதர சகோதரிகளே !

உங்களைத்தன் உறவுகளாக எண்ணித்தானே மட்டு மண்ணில் கால்வைத்தார் வந்தாறுமூலை பல்கலைக்கழக மாணவி தனுஷ்கோடி பிறேமினி .நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் – தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் கடத்தப்பட்ட 2006 ஜனவரி 29 அன்று பிள்ளையானால் கருணா குழு உறுப்பினர்களுக்கு உத்தரவு ஒன்று வழங்கப்பட்டது. மட்டக்களப்பில் இருந்து வாகனம் ஒன்றில் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் வந்து கொண்டிருப்பதாகவும், அவர்களை வெலிகந்தைப் பகுதியில் வைத்து கடத்தும்படியும் பிள்ளையான் உத்தரவிட்டான்.

பிறேமினி தனுஸ்கோடி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கிழக்கு மாகாண கணக்காளராகவும் பணியாற்றியவர்.
பிறேமினிக்கு ஏற்பட்ட கதி மிகக் கொடூரமானது. பிறேமினி கதறக் கதறக் சிந்துஜனால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டார். அதன் பிறகு அவர் மற்றைய கருணா குழு உறுப்பினர்களாலும் வல்லுறவிற்கு உப்படுத்தப்பட்டார். கருணா குழு உறுப்பினர்கள் 14 பேர் இந்த கொடிய வல்லுறவில் ஈடுபட்டனர்.பின்னர் பிறேமினியை கோடரியால் வெட்டிக் கொன்றனர். அவருடைய உடல் ஒரு பற்றைக்குள் வீசப்பட்டது.
ஒரு இளம் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிக் கோடரியால் வெட்டிக் கொலைசெய்த பாதகத்தை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா என்று?
வருடா வருடம் மார்ச் 8 மகளிர் நாள் என்று ஏன் கூடுகிறீர்கள்? ஊர்வலம், சிற்றுண்டி, குளிர்பானம் என ஒரு சடங்காகவே இதனைத் தொடரப்போகிறீர்களா ?

ஆரையம்பதியில் அனுஷ்யாவுக்கும், மட்டுநகரில் காத்தான்குடி ரிபாயாவுக்கும் நிகழ்ந்த அவலங்கள், கொலைகளை மௌனமாக அங்கீகரித்ததனாலேயே சட்டத்தையும் நீதியையும் எப்படியும் வளைக்கலாம் என்ற நம்பிக்கை இலட்சியத்தைத்தூக்கியெறிந்த ஆயுததாரிகளுக்கு ஏற்பட்டது. இவர்களுக்கு எதிராக என்ன செய்யப்போகிறீர்கள்? இந்த மூன்று ஆயுதக் குழுக்களையும் இயக்கியவர்களை அரசியல் வாதிகளாக அங்கீகரித்தமைக்கு நாங்கள் வெட்கப்படவேண்டாமா?தலைகுனியத் தேவையில்லையா ?

மகளிர் விவகார பிரதி அமைச்சராக ஒரு தமிழ்ப் பெண்னே இருக்கிறார். மறுக்கப்பட்ட நீதியை வழங்குவதில் தர்மராக விளங்கும் இளஞ்செழியன் ஐயா மட்டு. மேல் நீதிமன்றில் கடமையைப் பொறுப் பேற்கவுள்ளார். எங்களுக்கான கடமை என்ன என்பதைத் தீர்மானிக்கும் காலம் நெருங்கி விட்டது.

ரிபாயாவின் விடயத்தில் சாட்சி தயார்! இவரைக் கைது செய்த இரா . துரைரத்தினத்துக்கு எதிராக என்ன செய்யப்போகிறீர்கள்? இந்த விடயம் தொடர்பாக வடகிழக்கு மாகாண சபை தவிசாளராக இருந்த ராம் தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் .

அனுஷ்யா விடயத்தில் அந்த ஆயுதக்குழுவின் தலைவரை (ஜனா) போக வேண்டிய இடத்துக்கு அனுப்பத் தயராக மாட்டீர்களா? அனுஷ்யாக் கைது

செய்த ராம் இன்று சுதந்திர மனிதர். இப் பாதகத்துக்குத் துணைபோன பெண் மணி நீதி கேட்பதைக் கூட குற்றமாகக் கருதுகிறார். இவர்கள் தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன ?

பல்கலைக்கழக மாணவி பிறேமினி தனுஷ்கோடி கிழக்கு மக்களுக்கு என்ன பாதகம் செய்தார்? யூதர்களுக்கு இழைக்கப்படட கொடூரங்கள் தொடர்பான சகல விபரங்களையும் திரட்டி ஆவணமாகப் பதிந்து வைத்துள்ளது இஸ்ரேலிய அரசு. அவர்களுக்கெதிராகப் பாதகங்களைப் புரிந்தோர் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் மறைந்து வாழ்ந்தபோதும் குடு குடு கிழவர்களான நிலையிலும் தண்டிக்கப்பட்டனர். யூதர்களின் ஒட்டுமொத்தக் கூட்டு முயற்சியே இதற்குக் காரணம்.

வங்க தேசத்தில் ( அன்றைய கிழக்குப் பாக்கிஸ்தான் ) அன்றைய பாக்கிஸ்தான் அரசுக்கு ஆதரவாக மனித உரிமை மீறல் செயற் பாட்டில் ஈடு பட்ட பிரபல அரசியல் வாதிகள் சவாஹீத்தீன் குவாதர் சவ்திரி மற்றும் அல் அஹ்சான் முகமது முஜாசித் ஆகிய இருவருக்கும் சுமார் நான்கு தசாப்தங்களின் பின் மரண தண்டனை விதித்தது . வங்கதேசம். இதெல்லாம் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

பூனைக்கு மணி கட்டுவது யார் என்று தேடாதீர்கள். எல்லோருக்கும் இவள் சகோதரி – மகள்
இங்கே என்ன நடக்கிறது ? பாதகத்துக்குப் பொறுப்பானவர் புத்தகம் எழுதுகிறாராம். புத்தகப் பக்கங்களின் எண்களைக் கவனியுங்கள் .இந்தப் பாதகத்துக்கு ஏ தாவது சமாதானம் சொல்லும் பக்கங்கள் கிழிக்கப்பட்டிருக்கலாம். மார்ச் 8 வரை காத்திருக்க வேண்டாம்
நீதியை நிலைநாட்ட அடியெடுத்து வையுங்கள்