இந்து தர்மாசிரியர் பரீட்சைக்கு தோற்றுபவர்களுக்கான கருத்தரங்கு

875

இந்து தர்மாசிரியர் பரீட்சைக்குத் தோற்றவுள்ள அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் வெளிவாரியாக இப் பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முன்னோடிக் கருத்தரங்கானது இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் 30.03.2018 வெள்ளிக் கிழமை மு.ப 9.00 மணிமுதல் முழுநேரக் கருத்தரங்காக நாவற்குடா, இந்து கலாசார நிலையம் – கிழக்கு மாகாணப் பிராந்தியக் காரியாலயத்தில் நடைபெற்றது.

இப் பரீட்சைக்கான விரிவுரைகள் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் திருமதி. ஹேமலோஜினி குமரன் (அறநெறிப் பிரிவு) மற்றும் ஆசிரியர்களான ஜீ. பால்ராஜ், திருமதி. சோபா ஜெயரஞ்சித் ஆகியோரால் நடத்தப்பட்டது. இக் கருத்தரங்கு நிகழ்வில் அம்பாறை, மட்டக்களப்பு. பதுளை, பொலநறுவை, திருகோணமலை மாவட்டங்களிலிருந்து 200 ற்கும் மேற்பட்ட பரீட்சாத்திகள் கலந்து கொண்டனர்.

SHARE