முல்லைத்தீவில் 17 எருமை மாடு கன்றுகள் திருட்டு

406

முல்லைத்தீவில் 17 எருமை மாடு கன்றுகள் திருட்டு

முல்லைத்தீவு ஆண்டான்குளம் பகுதியிலுள்ள மூன்று எருமைமாடு பட்டிகளிலிருந்து நேற்று ஒரே இரவு 17 எருமைமாட்டுக் கன்றுகள் திருட்டுப்போயுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று ஒரே இரவில் முல்லைத்தீவு குமுழமுனை ஆண்டான்குளம் பகுதிகளிலுள்ள மூன்று எருமைமாட்டு பட்டிகளிலிருந்த எருமைமாடு கன்றுகள் 17 இனந்தெரியாத நபர்களினால் திருடப்பட்டுள்ளதாக இன்று காலை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளைப் பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.