பிரான்ஸ்-லாகூர்னெவ் நகரச சபை உறுப்பினர் அந்தோனி றூசல் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்

478

காட்சியும் எழுச்சியுமாக ஈழத்தமிழ் திரைப்பட சங்கம் – பிரான்ஸ் பெருமையுடன் வழங்கும் ‘உரு’ குறும்படத்தினைக் காணவருமாறு பிரான்ஸ்-லாகூர்னெவ் நகரச சபை உறுப்பினர் அந்தோனி றூசல் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கைத்தீவின் இறுதிப்போரின் போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மார்களது நீதிக்கான போராட்டத்தை பேசு பொருளாக கொண்டுள்ள இக்குறும்படம் பல சர்வதேச மனித உரிமை விருதுகளைப் பெற்றுள்ளது.

மனித உரிமை சாசனம் வரையப்பட்ட பிரென்சு மண்ணில் முதற்திரையிடலாக எதிர்வரும் ஞாயிறு 10ம் திகதி மாலை 4 மணி, 5h30 மணிக்கு இரண்டு காட்சிகள் திரையிடப்பட இருக்கின்றன. Cinema étoile, 1 allée Progrés, 93120 La Courneuve / Tram 1 : Hotel de ville – La courneuve

நுழைவுக்கட்டணம் ஏதுமற்ற காட்சிகளாக லாகூர்னெவ் நகர சபையின் உத்தியோபூர்வ அங்கீகாரத்துடன் நகரசபை திரையரங்கில் திரையிடப்பட்டுகின்ற முதற் ஈழத்தமிழ் குறும்படம் இதுவென்ற பெருமையினை இப்படம் பெறுகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

SHARE