2 வது நாளாக ஐ.நா முன்றலில் இன அழிப்பு புகைப்படங்கள்

345

2 வது நாளாக ஐ.நா முன்றலில் இன அழிப்பு புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

ஐ.நா சபையின் 39 ஆவது மனித உரிமைக் கூட்டத்தொடர் நேற்று 10 ஆம் திகதி திங்கட்கிழமை காலை ஆரம்பமாகியுள்ளது இது எதிர்வருகின்ற 28 ஆம்திகதி வரை நடைபெற இருக்கின்றது

 

மனித உரிமை செயற்பாட்டாளர் கஜன் அவர்களது ஒழுங்கமைப்பில் ஸ்ரீலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு ஆதாரங்களான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வருகின்றவர்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டு அதற்கான விளக்கங்களும் கொடுக்கப்பட்டு வருகின்றது .


அங்கு வருகைதந்த உல்லாசப்பயணிகள் புகைப்படங்களை பார்வையிட்டதுடன் தங்களது கையடங்கத்தொலைபேசிகளில் அப் புகைப்படங்களை பதிவுசெய்து செல்கின்றனர்.

கடந்த 2013 ஆண்டு மார்ச்மாதத்தில் இருந்து ஆறுவருடங்களாக இனப்படுகொலைக்கான ஆதராப் புகைப்படங்கள் ஐ.நா முன்றலில் காட்சிப்படுத்தப்பட்டு சர்வதேசத்திடம் நீதி கோரி நிற்கின்றோம் என மனித உரிமை ஏற்பாட்டாளர் கஜன் குறிப்பிட்டார்.

 

SHARE