வன்னியூர் செந்தூரன் மனைவி படுகொலையில் ஸ்ரீ லங்கா புலனாய்வுத்துறை

11643

தனது மனைவி கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் படுகொலையில் சந்தேகம் இருப்பதாக வன்னியூர் செந்தூரன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இதனை நாம் உற்று நோக்கினால் அவர் தனது முகநூல் பக்கத்தில் கடந்த 18ம் திகதி கட்சிலைமடு தான்தோன்றீஸ்வரர் ஆலயம் அரச படையினரால் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்டு தடயங்கள் அழிக்கப்படுவதை எடுத்துக்கூறியதுடன் தமிழரின் பூர்வீக நிலம் என்பதன் ஆதாரங்களை காட்டி நிரூபித்து மேலும் பல ஆதாரங்களைத் தொடர்ந்து தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இவரது பேச்சு அரசு இனவாதிகளை அச்சுறுத்தும் வகையில் இருப்பதை நாம் காணலாம். இவரது மனைவி திட்டமிட்டே குறிவைத்து கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு இனவாத அரசுக்கு எமது மக்கள் பலியாவது காலங்காலமாக நடப்பதை நாமறிந்து கோள்ள வேண்டும். மேலும் ஆதாரங்கள் வெளியிடப்படும் எனக்கூறியதைத் தடுக்க திட்டமிட்டே இனவாத அரசு அவரது மனைவியைக் கடத்திக் கொன்றுள்ளது.மக்களே நாம் விழிப்படைவோம் உண்மையை உணர்ந்து செயல்படுவோம். எமக்காக எமது இனத்துக்காகக் குரல் கொடுத்த உன்னதமான உணர்வாளன் தனது துணையிழந்து நிக்கும் இவ்வேளையில் திட்டமிட்ட சிங்களசதிகார அரசின் அழிப்புநடவடிக்கையை எதிர்ப்போம்.

இந்தக்கானெலியை முழுமையாகப் பாருங்கள்.

தமிழர்களின் இருப்புக்கான எச்சரிக்கையின் வடிவங்கள்..ஆக்கிரமிப்புகள் தொடர்கிறது..கண்டிப்பாக அனைவரும் பார்க்கவேண்டிய காணொளி..“மறைக்கப்பட்ட கற்சிலைமடு தான்தோன்றீஸ்வரர் ஆலயம் ” அடுத்த காணொளி விரைவில்…
–வன்னியூர் செந்தூரன்–

 

SHARE