மறைக்கப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பு ஆதாரங்கள். 1970 முதல் 1977 வரை

76
இலங்கையில்  மறைக்கப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பு ஆதாரங்கள்
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா 1970முதல் 1977  வரை  பிரதமர்.
( Sirimavo Bandaranaike  Prime Minister)
இலங்கையில் 1977ம் ஆண்டு நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலைகள் ஆகும்.
1977 நாடாளுமன்ற தேர்தலில் இலங்கைத் தமிழ் தேசியவாத கட்சியான தமிழர் விடுதலை கூட்டணி .
தமிழ் பகுதிகளில் தனிநாடு  கோரிக்கையை முன்வைத்து பெரு வெற்றி பெற்றதை அடுத்து
தமிழ் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கை தமிழருக்கு எதிராக இந்த  வன்முறைகள் இடம்பெற்றன. அனுராதபுரம் கொழும்பு உட்பட பல பகுதிகளிலும் தமிழர்கள் தாக்கப்பட்டனர் .
இதில் 300 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டதாக அரச விசாரணை தெரிவித்தது.
ஆனாலும் இத்தொகை பல மடங்காக இருந்தது என்று அரச சார்பாக நிறுவனங்கள் அறிவித்தது .
ஆயிரக்கணக்கானோர் அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
 ஸ்ரீமாவோ பண்டாரநாயகா தலமையில்  இலங்கை அரசின் ஆதரவோடு இந்த கலவரங்கள் நிகழ்த்தப்பட்டன. இந்த காலப்பகுதியில் இலங்கையின் சனாதிபதியாக  வில்லியம் கோபல்லாவ இருந்துள்ளார்.
இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4வது உலகத் தமிழாராட்சி மாநாட்டின் இறுதி தினமான 10.01.1974 இல் மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் 09 பேர் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு உட்பட பல்வேறு நடவெடிக்கைகள் ஏற்படுத்திய  குழப்ப நிலையினால் மரணம் அடைந்தனர் .
காவல்துறை துப்பாக்கிச் சூட்டினால் மின்கம்பிகள் அறுந்து மக்கள் திரண்டிருந்த இடத்தில் விழுந்தமை, ஆயிரக்கணக்கில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என திரண்டிருந்த மக்கள் மத்தியில் கண்ணீர்ப் புகை குண்டுகளை  வீசியமை மற்றும் தடியடிகள் நடத்தியமை ,  என்பன இந்த மரணங்களுக்கு காரணமாயின. இந்த இறப்புக்கள் பின்னர் தீவிரமாக வெளியிடப்பட்ட தமிழ்த் தேசியவாத போக்குக்கு
இந்த படுகொலைகள் யாவிற்கும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவே காரணமாகும்.
குறிப்பு:- இதில் தரப்படும் தமிழின படுகொலை பற்றிய விபரங்கள் முழுமையான தொகுப்பல்ல
போர்க்கால சூழலில் சில படுகொலைகள் பற்றிய விபரங்கள் தவற விடப்பட்டுள்ளன. எம்மால் அறியப்பட்ட கிடைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இந்த தொகுப்புகள் தொகுக்கப்பட்டுள்ளது.
நோக்கம்:- இதில் எழுதப்பட்டுள்ள விடயங்கள் ஸ்ரீலங்கா அரசினால் திட்டமிட்டு  தமிழருக்கெதிரான படுகொலைகள் இன்றுவரையும்  இடம்பெற்று கொண்டிருக்கிறது.  இதை பார்க்கும் நீங்கள் எம்மினத்தை  காக்க உதவுங்கள்.
நன்றி.
ம. கஜன்
அனைத்துலக மனித உரிமைச்சங்கம்   பிரெஞ்சு
 00 33 1  45 98 89 49  0033 75 80 870 84