தமிழின அழிப்பு மகிந்த ராஜபக்ச 4ம் பக்கம்

635

மறைக்கப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பு ஆதாரங்கள்.

மகிந்த ராஜபக்ச . 4ம் பக்கம்

மகிந்த ராஜபக்ச 19.11.2005 -முதல்  09.01.2015 காலப்பகுதி
Mahinda Rajabaksa   President
இவர் பௌத்த மத வெறி பிடித்தவர் தமிழினத்தை அழித்து இலங்கையை சிங்கள தீவாக மாற்றுவதில் மும்மரமா செயல்பட்டவர்.
 ஜே ஆர் ஜெயவர்த்தனா எப்படி தமிழினத்தை திட்டமிட்டு படுகொலை செய்தாரோ அதிலும் பலமடங்காக இந்த மகிந்த ராஜபக்ச படுகொலைகள் புரிந்தார்.
இவரின் காலத்தில் வெள்ளை வானில் கடத்தப்பட்டு எத்தனையோ அப்பாவி பொதுமக்கள்  படுகொலை செய்யப்பட்டனர். மற்றும் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டும் படுகொலையும் செய்யப்பட்டனர்.
மேலும் தமிழ் அரசியல் தலைவர்களை திட்டமிட்டு படுகொலைகள் செய்தவர். மற்றும் பாடசாலை மாணவிகள் ,ஆசிரியர்கள் கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலைகள் செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர். அத்தோடு விடுதலைப்புலிகளின் போர்நிறுத்த காலத்தில் அத்துமீறி போரைத் தொடுத்தவர். அத்தோடு தமிழர் தாயகங்களுக்கு பொருளாதார தடையை கொண்டுவந்து மருந்துக்கள்,உணவுப்பொருட்கள் என்பனவற்றை முற்றுமுழுதாத தடைசெய்து தமிழ் மக்களை பட்டினியாலும் நோயாலும்  பாதிப்புக்குள்ளாகி இனப்படுகொலை புரிந்தவர். அதுமட்டுமல்லாது குழந்தைகள் அருந்தும் பால்மாக்களையும் தடைசெய்து பச்சிளம் பிள்ளைகள் பசியினால் துடிதுடித்து  இறக்கவும் காரணமாக இருந்தவர் இந்த மகிந்த ராஜபக்ச .
மேலும் ஸ்ரீலங்கா இராணுவத்திட்கும் விடுதலை புலிகளுக்குமிடையிலான கடுமையான போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அரசசார்பற்ற தொண்டுநிறுவனங்கள் அனைத்தையும் முழுமையாக போர் நடக்குமிடத்திலிருந்து வெளியேற்றிவிட்டு சென்சிலுவை சங்கம் போன்ற நிறுவனங்களையும் வெளியேற்றி விட்டு பன்னாட்டு ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளரர்கள் அனைவரையும் வெளியேற்றி எந்தவொரு செய்திகளும் வெளிசெல்லாத படி செய்துவிட்டு கொத்துக்குண்டு எரிகுண்டு இவையாவும் தமிழ் மக்கள் மீது வீசப்பட்டன .குறிப்பாக கொத்துகொண்டு எரிகுண்டு இரசாயன குண்டுகள் இவையாவும் சர்வதேச ரீதியால் தடை செய்யப்பட்டதொன்று இவ்வாறான குண்டுகளை பாவித்து ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள்களை கொன்று குவித்தனர்.
மேலும்  பொது மக்கள் அகதியாக உயிர் தப்பிக்கொள்வதற்காக ஓடும் பொது அவர்களை பாதுகாப்பு வலயம் என கூறி   பாடசாலைகளிலும் ஆலயங்களிலும் மருத்துவமனைகளிலும் தங்க வைத்து .திட்டமிட்டு   எறிகணை வீச்சுகளும் விமான குண்டுவீச்சுகளையும் அவ்விடங்களில்  நிகழ்த்தி  அந்த மக்களை படுகொலை செய்தவர் . இந்த தாக்குதல்களில் குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் வயோதிபர்கள் என ஆயிரக்கணக்கில்  படுகொலை செய்யப்பட்டனர் அத்தோடு பலர் கண்கள் இழந்து  கால் கைகள் இழந்து ஊனமாக்கப்பட்டிருக்கிறார்கள் . இன்றுவரை அவர்கள் யாவரும் ஊனமாகவே வாழ்கின்றார்கள்.
தமிழ் மக்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் திட்டமிட்டு இவரால் அழிக்கப்பட்டதுடன் இவரால் சூறையாடவும் பட்டது.
2009 இறுதிப்போர் நடக்கும்போது பொதுமன்னிப்பு தரலாம் ஆயுதங்களை வைத்துவிட்டு சரணடையும்படி கூறிவிட்டு சரணடைந்தவர்களை  கையையும் கண்ணையும் கட்டி அந்த இடத்திலேயே ஆண் பெண் பாகுபாடின்றி ஆடை களையப்பட்டு வன்கொடுமைக்குட்படுத்தி படு கொலைசெய்தார் . அத்தோடு பிரான்சிஸ் ஜோசெப் பாதிரியாரோடு சரணடைந்த  போராளிகள் மற்றும் அவரின் குடும்பத்தினர் அதாவது பெண்கள் குழந்தைகள் உட்பட பெற்றோரால் கையளிக்கப்பட்ட  நூற்றுக்கணக்கானவர்கள் இன்றுவரையும் காண்பிக்கப்படவும் இல்லை விடுதலை செய்யவும் இல்லை.
1,46,000 மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் கொன்று குவித்தவர் இவர். உலகத்திலேயே அதிக கொடுமைகளை புரிந்து படுகொலை செய்தவர்  என வர்ணிக்கப்படும் ஹிட்லர்.
 ஆனால் அவரை விட 21ம் நூற்றாண்டில் அதிகமான இன படுகொலைகளை புரிந்தவர் இந்த மகிந்த ராஜபக்ச .
 தமிழினத்தை அழித்து இலங்கையை ஒரு பௌத்த சிங்கள நாடாக மாற்றுவதற்கு இன்றுவரையும் துடித்து கொண்டிருக்கிறார் .
***இவர்காலத்தில் நிகழ்ந்த படுகொலைகள்***
முல்லைத்தீவு பாதுகாப்பு வலைய பிரதேசத்தில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர் அத்தோடு 01.03.2009 அன்றும் 37 பேர் கொல்லப்பட்டனர். 61பேர் படுகாயம்
 01.03.2009 அன்று மாத்தளன் பகுதியில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட எறிகணை தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர்.53 பேர் படுகாயம்
முள்ளிவாய்க்கால் படுகொலை 02.03.2009 அன்று முள்ளிவாய்க்காலில் பாதுகாப்பு வலயம் என்று பிரகடன படுத்தப்பட்ட  பிரதேசத்தில் சிங்கள இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர்.
முல்லைத்தீவில் சிங்கள இராணுவத்தின் தொடர் ஏவுகணை தாக்குதலில் 122 பேர் கொல்லப்பட்டனர். பல பொதுமக்கள் படுகாயத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
மாத்தளன் தற்காலிக மருத்துவமனை படுகொலை 03.03.2009 அன்று மாத்தளன் பகுதியில் பாதுகாப்பு வலயத்துள் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மருத்துவமனை மீது சிங்களை இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
 03.03.2009 அன்று இலங்கை இராணுவம் மற்றும் வான் படையினர் நிகழ்த்திய எறிகணை வீச்சு மற்றும் குண்டுவீச்சில் மாத்தளன் அம்மபலவன் போக்கலாம் போன்ற பகுதிகளை சேர்ந்த அப்பாவி தமிழ் மக்கள் 57 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 104 பேர் படுகாயம்
முல்லைத்தீவு படுகொலை 04.03.2009 அன்று முல்லைத்தீவில் பாதுகாப்பு வலயத்தில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட எறிகணை தாக்குதலில் 73 பேர் கொல்லப்பட்டனர்.
பொக்கனை படுகொலை 04.03.2009 அன்று பொக்கனை பாதுகாப்பு வலய பிரதேசத்தில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட குண்டுத்தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
மாத்தளன் படுகொலை 04.03.2009 அன்று பாதுகாப்பு வலய பிரதேசம் அமைந்திருந்த மாத்தளன் பகுதியில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட எறிகணை தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
இரட்டை வாய்க்கால் படுகொலை 04.03.2009 அன்று பாதுகாப்பு வலய பிரதேசம் அமைந்திருந்த இரட்டை வாய்க்கால் பகுதிமீது சிங்கள இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
இரணைப்பாலை படுகொலை 04.03.2009 அன்று  பாதுகாப்பு வலய பிரதேசம் அமைந்திருந்த இரணைப்பாலை பகுதிமீது சிங்கள இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
வன்னியில் உள்ள மாத்தளன் மருத்துவமனை மற்றும் அண்டிய பகுதியில் இலங்கை  இராணுவத்தினரால் 04.03.2008 அன்று  நிகழ்த்திய எறிகணை தாக்குதலில் சர்வதேச செஞ்சிலுவை சங்க பணியாளர்
கே .விஜயராசா  உட்பட 37 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் 78 பேர் படுகாயம்.
ஆனந்தபுரம் படுகொலை  05.03.2009 அன்று பாதுகாப்பு வலய பிரதேசம் அமைந்திருந்த ஆனந்தபுரம் பகுதிமீது சிங்கள இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 69 பேர் கொல்லப்பட்டனர்.
முள்ளிவாய்க்கால் படுகொலை 06.03.2009 அன்று பாதுகாப்பு வலயம்  முள்ளிவாய்க்கால் பகுதிமீது சிங்கள இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 66 பேர் கொல்லப்பட்டனர்.
மாத்தளன் படுகொலை 07.03.2009 அன்று மாத்தளனில் இடம்பெயர்ந்தோர் வாழ்விடத்தில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 53 பேர் கொல்லப்பட்டனர். இராணுவத்தின் தொடர் தாக்குதலில் 208 பேர் 2 நாட்களில் கொல்லப்பட்டனர்.
முல்லைத்தீவு படுகொலை 08.03.2009 அன்று பாதுகாப்பு வலய பிரதேசத்தில் முல்லைத்தீவில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 71 பேர் படுகொலை செய்யப்பட்டனர், பதுங்கு குழிகள் மழை வெள்ளத்தால் நிறைந்ததால் தங்க இடமில்லாது குழந்தைகள் கொட்டும் மழையில் நனைந்தார்கள்.
அம்பலவன் பொக்கனை படுகொலை 09.03.2009 அன்று பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட அம்பலவன் பொக்கனை பிரதேசத்தில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட எறிகணை தாக்குதலில் 74 பேர் கொல்லப்பட்டனர்.
வன்னி பகுதிகளில் படுகொலை 10.03.2009 அன்று பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட வன்னியின் பல பகுதிகளில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட தொடர்ச்சியான ஏவுகணை தாக்குதல்களினால்  7 மணி நேரத்தில் 129 பேர் கொல்லப்பட்டனர்,.பலர் காயப்பட்டு ஊனமாக்கப்பட்டனர்.
முள்ளிவாய்க்கால் படுகொலை 11.03.2009 அன்று பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட எறிகணை தாக்குதலில் 62 பேர் கொல்லப்பட்டனர்.
முல்லைத்தீவு படுகொலை 14.03.2009 அன்று முல்லைத்தீவு பாதுகாப்பு வலயத்தின்மீது சிங்கள இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 69 பேர் கொல்லப்பட்டனர், முல்லைத்தீவு மருத்துவ முகாமில் பிறந்து தாய்ப்பால் அருந்தும் ஒரு பெண் குழந்தை ஏவுகணை வீச்சிற்கு ஆளாகி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
 வன்னி பகுதிகளில் தாக்குதல் 15.03.2009 அன்று வன்னியில் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பல பிரதேசங்களில் சிங்கள வான்படை மேற்கொண்ட கடுமையான் குண்டுவீச்சில் 58 பேர் கொல்லப்பட்டனர்
 16.03.2009 அன்று 29 பேர் கொல்லப்பட்டனர்
அதேபோலவே 17.03.2009 அன்றும் 32 பேர் கொல்லப்பட்டனர்.
பச்சைப்புல்மோட்டை வலைஞர் மடம் படுகொலை 17.03.2009 அன்று பாதுகாப்பு வலயம் அமைந்திருந்த பச்சைப்புல்மோட்டை வலைஞர் மடம்பீது சிங்கள வான்படை மேற்கொண்ட குண்டுவீச்சில் 52 பேர் கொல்லப்பட்டனர்.
பொக்கனை,மாத்தளன் படுகொலை 19.03.2009 அன்று பாதுகாப்பு வலயம் அமைந்திருந்த பொக்கனை,மாத்தளன் பிரதேசம் மீது சிஙகள வான்படை நடத்திய தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டனர்.
முல்லைத்தீவு படுகொலை 20.03.2009 அன்று பாதுகாப்பு வலயம் அமைந்திருந்த முல்லைத்தீவு பிரதேசத்தில் சிங்கள வான்படை மேற்கொண்ட குண்டுவீச்சில் 45 பேர் பலியாகினர்.
மாத்தளன் படுகொலை 20.03.2009 அன்று பாதுகாப்பு வலயம் அமைந்திருந்த மாத்தளன் பிரதேசத்தில் சிங்கள வான்படை நடத்திய குண்டுவீச்சில் 15 பேர் கொல்லப்பட்டனர்.பலர் காயப்பட்டு ஊனமாக்கப்பட்டனர்.
வன்னி பகுதிகளில் தாக்குதல் 21.03.2009 அன்று வன்னியில் பாதுகாப்பு வலய பிரதேசத்தில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர்.பலர் காயப்பட்டு ஊனமாக்கப்பட்டனர்.  லட்சக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டன.
புதுமாத்தளன் தற்காலிக மருத்துவமனை படுகொலை 22.03.2009 அன்று பாதுகாப்பு வலயம் அமைந்திருந்த புதுமாத்தளனில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மருத்துவமனைமீது சிங்கள இராணுவம் நடத்திய தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டதுடன்
23.03.2009 அன்று இடம்பெற்ற தாக்குதலில்   96 பேர் கொல்லப்பட்டனர். மேலும் படர் காயப்பட்டதுடன் சொத்துக்களும் சேதமாக்கப்பட்டது.
வலைஞர்மடம் படுகொலை 24.03.2009. அன்று பாதுகாப்பு வலயம் என இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட வலைஞர் மேடம் பகுதிகளில்  மக்கள் போய் குடியிருந்த வேளை திட்டமிட்ட சிங்கள இராணுவம் மேற்கொண்ட எறிகணை  தாக்குதலில் 62 பேர் கொல்லப்பட்டனர்.
பொக்கனை படுகொலை 25.03.2009 அன்று பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்த பொக்கனை மீது சிங்கள இராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர்.
மாத்தளன் படுகொலை 25.03.2009 வலயத்திற்குள் இருந்த மாத்தளன் மீது சிங்கள இராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 65 பேர் கொல்லப்பட்டதுடன் .
26.03.2009 அன்று 17 பேரும் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயங்களால் ஊனமாக்கப்பட்டனர்.
புதுமாத்தளன் தற்காலிக மருத்துவமனை படுகொலை 26.03.2009 அன்று பாதுகாப்பு வலயம் அமைந்திருந்த புதுமாத்தளனில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மருத்துவமனைமீது சிங்கள இராணுவம் நடத்திய தாக்குதலில் 46 பேர் கொல்லப்பட்டனர்.96 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பொக்கனை,மாத்தளன் படுகொலை 27,28ம் நாள் .03ம் மாதம் .2009ம் ஆண்டு  பாதுகாப்பு வலயம் அமைந்திருந்த பொக்கனை மற்றும் மாத்தளன் பகுதிகளில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 179 பேர் கொல்லப்பட்டனர்.
குறைந்தபட்சம் 76 குழந்தைகள் மற்றும் 16 கர்ப்பிணி பெண்களும் கொல்லப்பட்டனர்.
மாத்தளன் படுகொலை 29.03.2009 அன்று பாதுகாப்பு வலயம் அமைந்திருந்த மாத்தளன் பிரதேசத்தில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
பொக்கனை படுகொலை 29.03.2009 அன்று பாதுகாப்பு வலயம் அமைந்திருந்த பொக்கனை பிரதேசத்தில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
வலைஞர் மடம் படுகொலை  29.03.2009 அன்று பாதுகாப்பு வலயம் அமைந்திருந்த வலைஞர் மட பிரதேசத்தில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 5 நாட்களில் 298 குடும்பங்களை சேர்ந்த 1192 பேர் கொல்லப்பட்டனர்.
அம்பலவன் பொக்கனை,வலைஞர் மடம் படுகொலை 30.03.2009 அன்று பாதுகாப்பு வலயம் அமைந்திருந்த அம்பலவன் பொக்கனை மற்றும் வலைஞர் மடம்  பிரதேசத்தில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 88 பேர் கொல்லப்பட்டனர்.
பொக்கனை படுகொலை 29.03.2009அன்று  பாதுகாப்பு வலயம் அமைந்திருந்த பொக்கனை பிரதேசத்தில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
 31.03.2009 அன்றும்   சிங்கள இராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த படுகொலைகள் யாவிட்கும் சர்வதேச போர் விதிமுறைகளை மீறியவரும் இனப்படு கொலையாளருமான  இலங்கையின் சனாதிபதி மகிந்த ராஜபக்சவே  காரணமாவார்.

நன்றி.
ம. கஜன்
அனைத்துலக மனித உரிமைச்சங்கம் பிரெஞ்சு
00 33 1 45 98 89 49 0033 75 80 870 84
Email [email protected]