தமிழின அழிப்பு ஆதாரங்கள். மகிந்த ராஜபக்ச 2ம் பக்கம்

1365

மறைக்கப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பு ஆதாரங்கள்.

மகிந்த ராஜபக்ச . 2ம்  பக்கம்

மகிந்த ராஜபக்ச 19.11.2005 -முதல்  09.01.2015 காலப்பகுதி
Mahinda Rajabaksa   President
இவர் பௌத்த மத வெறி பிடித்தவர் தமிழினத்தை அழித்து இலங்கையை சிங்கள தீவாக மாற்றுவதில் மும்மரமா செயல்பட்டவர்.
 ஜே ஆர் ஜெயவர்த்தனா எப்படி தமிழினத்தை திட்டமிட்டு படுகொலை செய்தாரோ அதிலும் பலமடங்காக இந்த மகிந்த ராஜபக்ச படுகொலைகள் புரிந்தார்.
இவரின் காலத்தில் வெள்ளை வானில் கடத்தப்பட்டு எத்தனையோ அப்பாவி பொதுமக்கள்  படுகொலை செய்யப்பட்டனர். மற்றும் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டும் படுகொலையும் செய்யப்பட்டனர்.
மேலும் தமிழ் அரசியல் தலைவர்களை திட்டமிட்டு படுகொலைகள் செய்தவர். மற்றும் பாடசாலை மாணவிகள் ,ஆசிரியர்கள் கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலைகள் செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர். அத்தோடு விடுதலைப்புலிகளின் போர்நிறுத்த காலத்தில் அத்துமீறி போரைத் தொடுத்தவர். அத்தோடு தமிழர் தாயகங்களுக்கு பொருளாதார தடையை கொண்டுவந்து மருந்துக்கள்,உணவுப்பொருட்கள் என்பனவற்றை முற்றுமுழுதாத தடைசெய்து தமிழ் மக்களை பட்டினியாலும் நோயாலும்  பாதிப்புக்குள்ளாகி இனப்படுகொலை புரிந்தவர். அதுமட்டுமல்லாது குழந்தைகள் அருந்தும் பால்மாக்களையும் தடைசெய்து பச்சிளம் பிள்ளைகள் பசியினால் துடிதுடித்து  இறக்கவும் காரணமாக இருந்தவர் இந்த மகிந்த ராஜபக்ச .
மேலும் ஸ்ரீலங்கா இராணுவத்திட்கும் விடுதலை புலிகளுக்குமிடையிலான கடுமையான போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அரசசார்பற்ற தொண்டுநிறுவனங்கள் அனைத்தையும் முழுமையாக போர் நடக்குமிடத்திலிருந்து வெளியேற்றிவிட்டு சென்சிலுவை சங்கம் போன்ற நிறுவனங்களையும் வெளியேற்றி விட்டு பன்னாட்டு ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளரர்கள் அனைவரையும் வெளியேற்றி எந்தவொரு செய்திகளும் வெளிசெல்லாத படி செய்துவிட்டு கொத்துக்குண்டு எரிகுண்டு இவையாவும் தமிழ் மக்கள் மீது வீசப்பட்டன .குறிப்பாக கொத்துகொண்டு எரிகுண்டு இரசாயன குண்டுகள் இவையாவும் சர்வதேச ரீதியால் தடை செய்யப்பட்டதொன்று இவ்வாறான குண்டுகளை பாவித்து ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள்களை கொன்று குவித்தனர்.
மேலும்  பொது மக்கள் அகதியாக உயிர் தப்பிக்கொள்வதற்காக ஓடும் பொது அவர்களை பாதுகாப்பு வலயம் என கூறி   பாடசாலைகளிலும் ஆலயங்களிலும் மருத்துவமனைகளிலும் தங்க வைத்து .திட்டமிட்டு   எறிகணை வீச்சுகளும் விமான குண்டுவீச்சுகளையும் அவ்விடங்களில்  நிகழ்த்தி  அந்த மக்களை படுகொலை செய்தவர் . இந்த தாக்குதல்களில் குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் வயோதிபர்கள் என ஆயிரக்கணக்கில்  படுகொலை செய்யப்பட்டனர் அத்தோடு பலர் கண்கள் இழந்து  கால் கைகள் இழந்து ஊனமாக்கப்பட்டிருக்கிறார்கள் . இன்றுவரை அவர்கள் யாவரும் ஊனமாகவே வாழ்கின்றார்கள்.
தமிழ் மக்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் திட்டமிட்டு இவரால் அழிக்கப்பட்டதுடன் இவரால் சூறையாடவும் பட்டது.
2009 இறுதிப்போர் நடக்கும்போது பொதுமன்னிப்பு தரலாம் ஆயுதங்களை வைத்துவிட்டு சரணடையும்படி கூறிவிட்டு சரணடைந்தவர்களை  கையையும் கண்ணையும் கட்டி அந்த இடத்திலேயே ஆண் பெண் பாகுபாடின்றி ஆடை களையப்பட்டு வன்கொடுமைக்குட்படுத்தி படு கொலைசெய்தார் . அத்தோடு பிரான்சிஸ் ஜோசெப் பாதிரியாரோடு சரணடைந்த  போராளிகள் மற்றும் அவரின் குடும்பத்தினர் அதாவது பெண்கள் குழந்தைகள் உட்பட பெற்றோரால் கையளிக்கப்பட்ட  நூற்றுக்கணக்கானவர்கள் இன்றுவரையும் காண்பிக்கப்படவும் இல்லை விடுதலை செய்யவும் இல்லை.
1,46,000 மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் கொன்று குவித்தவர் இவர். உலகத்திலேயே அதிக கொடுமைகளை புரிந்து படுகொலை செய்தவர்  என வர்ணிக்கப்படும் ஹிட்லர்.
 ஆனால் அவரை விட 21ம் நூற்றாண்டில் அதிகமான இன படுகொலைகளை புரிந்தவர் இந்த மகிந்த ராஜபக்ச .
 தமிழினத்தை அழித்து இலங்கையை ஒரு பௌத்த சிங்கள நாடாக மாற்றுவதற்கு இன்றுவரையும் துடித்து கொண்டிருக்கிறார் .
***இவர்காலத்தில் நிகழ்ந்த படுகொலைகள்***
படகுத்துறை படுகொலை 02.01.2007 அன்று படகுத்துறை மக்கள் குடியிருப்பு பகுதி மீதான சிங்கள வான்படையின் குண்டுவீச்சில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
மன்னார் கல்வியாளர்கள் படுகொலை 27.02.2007 மன்னாரில் அமைந்துள்ள கல்வி அலுவலகம்  ஒன்றில் பணியாற்றிய 02 கல்வியாளர்கள்  சிங்கள இராணுவத்தின் ஆழ ஊடுருவும் பிரிவினரால் கொல்லப்பட
படுவான்கரை படுகொலை 2007ம் ஆண்டு மார்ச் மாதம் 8 மற்றும் 9 ஆகிய இரு நாட்களும் படுவான்கரை மக்கள் குடியிருப்பு பகுதிமீதான சிங்கள வான்படையின் குண்டு வீச்சில்  05 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயப்பட்டுள்ளதுடன்.   லட்சக்கணக்கான சொத்துக்களும் சேதமாக்கப்பட்டன.
சித்தாண்டி படுகொலை 29.03.2007 அன்று சித்தாண்டி மக்கள் குடியிருப்பு பகுதி மீது சிங்கள இராணுவத்தினர் நடாத்திய எறிகணை தாக்குதலில் 06 பேர் கொல்லப்பட்டனர்.
செங்கலடி படுகொலை 14.04.2007  சித்திரை புத்தாண்டு அன்று  05 பேர் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டார்கள்.
சிலாபத்துறை கிளைமோர் தாக்குதல் 02.09.2007 அன்று சிங்கள இராணுவத்தின் கிளைமோர் தாக்குதலில் அகதிகளுக்கு உணவு கொண்டு செல்லும்போது கிறிஸ்தவ பாதிரியார் உள்ளடங்கலாக 05 பேர் கொல்லப்பட்டனர்.
மன்னார் மாவட்டத்தை சேர்ந்த தேவாலய பாதிரியார் நிக்கோலஸ் பிள்ளை பாக்கியரஞ்சித் அவர்கள் 29.09.2007 முல்லைத்தீவில் இலங்கை ஆழஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் பலியானார்.
பெரியமடு ஏவுகணை தாக்குதல் 25.10.2007 அன்று பெரியமடு இடம்பெயர்ந்தோர் வாழ்விடம் மீதான சிங்கள இராணுவத்தின் ஏவுகணை தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.  இதில் ஒரு ஏவுகணை வெடித்ததில் ஒரு துகள்.  நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றை கிழித்ததில் சிசு வெளியே வந்துவிட்டது.
ரெட்டை செம்மணிக்குளம் படுகொலை 11.11.2007 அன்று ரெட்டை செம்மணிக்குளம் பகுதியில் 03 பேர் சிங்கள இரானுவத்தால் கடத்தி படுகொலை செய்யப்பட்டனர்.
தர்மபுரம் குண்டுவீச்சு 25.11.2007 அன்று தர்மபுரம் மக்கள் குடியிருப்பு பகுதி மீதான சிங்கள வான்படையின் குண்டுவீச்சு தாக்குதலில் 05 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.மேலும் பல பொதுமக்கள் காய பட்டத்துடன் வீடுகள் பலவும் பலத்த சேதத்துக்கு உள்ளாக்கப்பட்டது.
 ஐயன் குளம் கிளைமோர் தாக்குதல் 27.11.2007 அன்று ஐயன்குளம் பகுதியில் சிங்கள இராணுவத்தின் ஆழ ஊடுரும் படையினரால் நடாத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் சிக்கிய பள்ளி பேரூந்தில் பயணித்த 11 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
புலிகளின் குரல் வானொலி நிலைய தாக்குதல் 27.11.2007 அன்று புலிகளின் குரல் வானொலி கலையகத்தின் மீதான சிங்கள வான்படையின் திட்டமிட்ட குண்டுத்தாக்குதலில் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த பணியாளர்கள்  10 பேர் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்த்தில் கொல்லப்பட்டவர்களது விபரங்கள்
01. முரளிதரன் சிந்துஜன் 11 மாணவன்
02. கறுப்பையா பிரியதர்சனன் 20 மாணவன்
03. தியாகராசா மகேஸ்வரன் 27 விவசாயம்
04. செல்வராஜா சிவகுமாரன் 46 வர்த்தகர்
05. கணேசமூர்த்தி சுபாஜினி 36 புலிகளின்குரல் வானொலி நிலைய அறிவிப்பாளர்
06. மகாலிங்கம் சுரேஸ்லின்பியோ 36 புலிகளின்குரல் வானொலி நிலையப்பணியாளர்
07. தருமலிங்கம் தவமணிதேவி 62 வயோதிபா
08. கிருஸ்பிள்ளை தருமலிங்கம் புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் சாரதி
09. ஆனந்தராசா தெய்வநாயகி 55 வீட்டுப்பணி
10. இராசலிங்கம் பிரதீபன் 21
 
இச்சம்ப்பவத்த்தில் காயமடைந்தவர்களின் விபரம்
01. பவநிதி 24
02. குணசீலி 29
03. நிர்மலாதேவி 54
04. கவிதா 29
05. தினேஸ்குமார் 21
06. ஸ்ரெலா 35
07. சாந்தபோதினி
08. ஜனனி 33
09. ஜி.மனோஜ் 04
10. சி.பவிதா 06
தட்சணமடு கிளைமோர் தாக்குதல் 29.01.2008 அன்று தட்சணமடுவில் சிங்கள இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் பிரிவின் கிளைமோர் தாக்குதலில் சிக்கி பள்ளி பேருந்தில் பயணித்த பள்ளிக்குழந்தைகள் 10 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
கிராஞ்சி குண்டுவீச்சு 22.02.2008 அன்று கிராஞ்சியில் மக்கள் குடியிருப்பு பகுதி மீதான சிங்கள வான்படையின் தாக்குதலில் 09 பேர் கொல்லப்பட்டனர். பலர் பலத்த காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
முறிகண்டி கிளைமோர் தாக்குதல் 23.05.2008 அன்று முறிகண்டி பகுதியில் சிங்கள இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினால் வைக்கப்பட்ட கிளைமோர் குண்டுத்தாக்குதலில் பொதுமக்கள் பயணம் செய்த வாகனம்  சிக்கியதில் அதில் பயணித்த 17 பேர் கொல்லப்பட்டனர். 02 பேர் படுகாயம்
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் இலங்கை இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட  கிளைமோர் தாக்குதலில் 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
கொழும்புத்துறை பாசையூர் பகுதிகளில் 29.05.2008 அன்று இடம்பெற்ற  எறிகணை தாக்குதலில் 5 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர் 13 பேர் படுகாயம்.
புதுக்குடியிருப்பு குண்டுவீச்சு 15.06.2008 அன்று புதுக்குடியிருப்பு மீதான சிங்கள வான்படையின் தாக்குதலில் பதுங்குழிகளில் பதுங்கியிருந்த 04 பேர் கொல்லப்பட்டனர்.
மட்டக்களப்பு படுகொலை 11.07.2008 அன்று மட்டக்களப்பில் பயணிகள் பேரூந்தை இலக்கு வைத்து சிங்கள இராணுவத்தினர் நடாத்திய தாக்குதலில் 04 பேர் கொல்லப்பட்டனர்.
25.07.2008 அன்று இலங்கை இராணுவ ஆழ ஊடுருவும் படையினரால் மாங்குளம் வீதியில் நிகழ்த்திய கிளைமோர் தாக்குதலில் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி உத்தியோகஸ்தரும் பூநகரி பிரதேச பிரதி  திட்டமிடல் பணியாளருமான சாந்தலிங்கம் விமலகுமார் அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்
.
கிளிநொச்சி புதுமுறிப்பு பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் மீது இலங்கை படையினர் நிகழ்த்திய தாக்குதலில் 02 குழந்தைகள் உட்பட 5 பேர் பலியாகினர் 03 பேர் படு காயம்
2008 ஜூலை மாதம் இலங்கை இராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர்    பலியானவர்கள்
03.7.2008 வவுனியா பாரதிபுரத்தில் முதியவர் ஒருவர். மாறம்பை குளத்தில் இளைஞன் ஒருவர்  கொல்லப்பட்டனர்.
07.07.2008 திருகோணமலையில் வர்த்தகர் ஒருவர்  கொல்லப்பட்டனர்.
16.07.2008 மன்னார் விடத்தல் தீவு மூன்றுபேர்  கொல்லப்பட்டனர்.
20.07.2008 இளவாலையில் ஒருவர்  கொல்லப்பட்டனர்.
22.07.2008 யாழ் உரும்பிராயில் இளைஞர் ஒருவர் மற்றும் நயினாதீவு 4ம் வட்டாரம் இளைஞர் ஒருவர் இராணுவத்தினரால் அடித்து கொல்லப்பட்டார்
.
23.07.2008 வவுனியா வேப்பங்குளத்தில் வர்த்தகர்  ஒருவர் மற்றும் முல்லைத்தீவு மாந்தை கிழக்கில் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையின் கிளைமோர் தாக்குதலில் ஒருவர் படுகொலை.
25.07.2008 வவுனியா நெடுங்கேணி பகுதியில்  இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையின் கிளைமோர் தாக்குதலில் மாணவர் ஒருவர் படுகொலை
மற்றும்.ஊர்காவற்றுறை புளியங்கூடல் இளம் குடும்பஸ்தர் இராணுவத்தால் கழுத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
2008 ஜூலை மாதம் முழுவதுமாக வடக்கு கிழக்கில் 38 பேர் படுகொலை 42 பேர் காணவில்லை என மனித உரிமைகள் செயலகத்தின் மாதாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 08.08.2008  அன்று முல்லைத்தீவு  மருத்துவமனையில் இலங்கை வான்படை தாக்குதலில் ஒன்றரை வயது குழந்தை பாலி 10ற்கும் மேட்பட்டோர் படுகாயம்.
மற்றும் வவுனியா நெடுங்கேணி கிளைமோர் தாக்குதலில் பொதுமகன் ஒருவர்  கொல்லப்பட்டனர்.
 வன்னேரி பகுதியில் எறிகணை தாக்குதலில் 48 வயதானவர் பலி

 கொழும்பு களனி பாலத்துக்கு அருகில் மூன்று இளைஞர்கள்  கொல்லப்பட்டனர்.

09.08.2008 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கிபிர் தாக்குதலில் ஆசிரியர் உட்பட இருவர் கொல்லப்பட்டனர்.
10.08.2008 மட்டக்களப்பு காத்தான்குடி கல்முனை வீதி சந்தைக்கு அருகில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை
11.08.2008 முல்லைத்தீவு குமளமுனை எறிகணை தாக்குதலில் இளைஞர்  ஒருவர் கொல்லப்பட்டனர்.
புத்தளையில் வர்த்தகர் ஒருவர்  கொல்லப்பட்டனர்
திருகோணமலை நிலாவெளியில் குடும்பஸ்தர் ஒருவர்  கொல்லப்பட்டனர்.
 2008 செப்டெம்பர் மாதம் இலங்கை இராணுவத்தின் புலனாய்வுத்துறையினரால் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில்  ஒருவர்  கொல்லப்பட்டனர்.

04.09.2008 வவுனியா பம்பைமடு விவசாயிகளின் சுட்டுக்கொலை  மற்றும் வவுனியா குரிசுட்டான் குள கிளைமோர் தாக்குதலில் பொது மகன் ஒருவர்  கொல்லப்பட்டனர்.

05.09.2008 புத்தளம் உடப்பு ஆண்டிமுனை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர்.மற்றும் வவுனியா தாலிக்குளம் பகுதியில் 5 இளைஞர்கள். கொல்லப்பட்டனர்.
06.09.2008 தென்மராட்சி மிருசுவில் அய்யனார் கோயில் பகுதியில் வீடொன்றில் பெண்ணொருவர் கொல்லப்பட்டனர்.
08.09.2008 யாழ்ப்பாணம் நீராவியடி பகுதியில் வீடொன்றில் தாயும் மகனும்.  கொல்லப்பட்டனர்.
09.09.2008 அம்பாறை அக்கரைப்பற்று  மாணவன் ஒருவன்   கொல்லப்பட்டனர்.
10.09.2008  யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கிலும் தென்மராட்சியிலும் இனைஞர் ஒருவர். யுவதி ஒருவர்   கொல்லப்பட்டனர்.
.
20.09.2008 கொழும்பு கொட்டாஞ்சேனையில் இளைஞர் ஒருவர்   கொல்லப்பட்டனர்.
21.09.2008 யாழ்ப்பாணம் அரியாலையில் இளைஞர் ஒருவர்.கொல்லப்பட்டனர்.
திருகோணமலை கோணேஸ்வர  குருக்கள்  கொல்லப்பட்டனர்.
22.09.2008 வவுனியா வைரவ புளியன்குளத்தில்  2 பெண்கள்  கொல்லப்பட்டனர்.
 பொதுவிலில் இரண்டு இளைஞர்கள் பெண் ஒருவர்   கொல்லப்பட்டனர்.
23.09.2008 தென்மராட்சியில் இளம் வர்த்தகர் ஒருவர்   கொல்லப்பட்டனர்.
  கொழும்பில் இளைஞர் ஒருவர்  கொல்லப்பட்டனர்.
 பரந்தன் தாக்குதல் இலங்கை வான் படையினரால் 10.10.2008 அன்று பரந்தன் குமரபுரத்தில் இடம்பற்ற தாக்குதலில் 02 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  02 சிறுவர்கள் உட்பட 13 பேர் படுகாயம்
வட்டமடு படுகொலை 16.10.2008 அன்று வட்டமடு பிரதேசத்தில் விவசாய நிலங்கள் மீதான தாக்குதலில் சிக்கி 04 பேர் கொல்லப்பட்டனர் இதே ஆண்டில் வட்டமடுவின் பல்வேறு இடங்களில் சிங்கள இராணுவம் மற்றும் ஊர்காவற்படையினராலும்  நடத்தப்பட்ட தாக்குதலில் 50 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் ஜீலை,ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் கொல்லப்பட்டனர்.
கல்முனை படுகொலை 02.11.2008 அன்று கல்முனையில் வணிக அங்காடிகள் மீது சிங்கள இராணுவம் நடத்திய தாக்குதலில் 05 பேர் கொல்லப்பட்டனர்.
வன்னி சன்னாசி பரந்தன் பகுதியில் இராணுவ ஆழ ஊடுருவும் படையினரால் நிகழ்த்திய கிளைமோர் தாக்குதலில் தந்தை மகன் உட்பட 03 பேர் படுகொலை செய்யப்பட்டனர் 02 பேர் படுகாயம்

மட்டகளப்பு படுகொலை 26.11.2008 அன்றும் இதே ஆண்டின் அக்டோபர்,நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில்  மட்டகளப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிங்கள இராணுவம் மற்றும் ஊர்காவற்படையினராலும் சிங்கள காடையினராலும்  நடாத்தப்பட்ட தாக்குதலில் 80 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

கிளிநொச்சி கல்லாறு பகுதியில் 29.11.2008 அன்று இலங்கை விமானப்படையினரால் நிகழ்த்திய கொத்தனிக் குண்டுத்தாக்குதலில் 5 வயது சிறுவன் உட்பட 05 படுகொலை  21 பேர் படுகாயம்
கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இலங்கை விமானப்படியினரால் 17.12.2008 அன்று நிகழ்த்திய குண்டு வீச்சில் 5மாத குழந்தை உட்பட 05 பேர் படுகொலை 09 பேர் படுகாயம்.
வன்னி படுகொலை 31.12.2008 அன்று வன்னி பிரதேசத்தில் இடம்பெயர்ந்தோர் வாழ்விடங்களை இலக்குவைத்து சிங்கள வான்படையினர் நடத்திய தாக்குதலில் 05 பேர் கொல்லப்பட்டனர்.
விடுதலை புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தற்கும் இடையிலான இறுதி போரின் போது (15.05.2009 – 18.05.2009 ) இலங்கை இராணுவத்தின் ஆட்லரி தாக்குதல், கடற்படையினரின் எறிகணைத்தாக்குதல், விமானதாக்குதல்,, எரிகுண்டு தாக்குதல், கொத்துக்குண்டு வீச்சு ( சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட குண்டுகள்) இராணுவ டாங்கி தாக்குதல் போன்ற பலவேறுபட்ட கொடூர தாக்குதலில் முள்ளிவாய்க்கால் பகுதியில் 2 சதுர கிலோமீட்டர்  பிரதேசத்தில் ஒதுங்கியிருந்த 1 லட்சத்துக்கும் மேட்பட்ட மக்களில் 25,000 பேர் தாக்குதல் நடந்த கணங்களில் படுகொலை செய்யப்பட்டதும் . காயப்பட்ட 25,000 மக்கள் சிகிச்சையின்றியும் மேலும் இராணுவத்தினரின் டாங்கி வாகனங்கள் பதுங்கு குழிகளிலிருந்த மக்களை மூடியதுமாக அவர்கள் பலியானார்கள்  .
அத்தோடு இறுதியுத்தத்தில் உயிருடன் எஞ்சியிருந்த போராளிகளுக்கு பொது மன்னிப்பு தரலாம் என அரசாங்கம் கூறி அவர்களை ஆயுதங்களை வைத்துவிட்டு  சரணடையுமாறு கூறி  வெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்த போராளிகளில் சிலரை உடனே படுகொலை செய்தனர் எஞ்சிய சில போராளிகளின்  கைகள் மற்றும் கண்களை கட்டி ஆடைகள் களையப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கியும் பெண் போராளிகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியும் படுகொலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
2009 இறுதி போரில் ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 46 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக அரச சார்பற்ற நிறுவனங்களும் தொண்டு நிறுவனங்களும் தெரிவிக்கின்றன.
அத்தோடு பொது மன்னிப்பு தரலாம் என்ற அறிவித்தலின் படி பாதர் பிரான்சிஸ் ஜோசெப் இன் தலைமையில்  சரணடைந்த நூற்றுக்கணக்கான போராளிகள் மற்றும் போராளிகளின் குடும்பங்கள்  அதாவது  பெண்கள்  சிறுவர்கள் வயோதிபர்கள் என நூற்றுக்கணக்கானோர்  இதுவரையும் விடுதலை செய்யவும் இல்லை அவர்களை காண்பிக்கப்படவும்  இல்லை. இன்றுவரையும் அவர்களை கையளித்த பெற்றோர்கள் தேடி அலைகிறார்கள்.
இந்த படுகொலைகள் யாவிட்கும் சர்வதேச போர் விதிமுறைகளை மீறியவரும் இனப்படு கொலையாளருமான  இலங்கையின் சனாதிபதி மகிந்த ராஜபக்சவே  காரணமாவார்.
நன்றி.
ம. கஜன்
அனைத்துலக மனித உரிமைச்சங்கம் பிரெஞ்சு
00 33 1 45 98 89 49 0033 75 80 870 84
Email [email protected]