தமிழின அழிப்பு ஆதாரங்கள். மகிந்த ராஜபக்ச 1ம் பக்கம்

1123

மறைக்கப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பு ஆதாரங்கள்.

மகிந்த ராஜபக்ச .1ம் பக்கம்

மகிந்த ராஜபக்ச 19.11.2005 -முதல்  09.01.2015 காலப்பகுதி
Mahinda Rajabaksa   President
இவர் பௌத்த மத வெறி பிடித்தவர் தமிழினத்தை அழித்து இலங்கையை சிங்கள தீவாக மாற்றுவதில் மும்மரமா செயல்பட்டவர்.
 ஜே ஆர் ஜெயவர்த்தனா எப்படி தமிழினத்தை திட்டமிட்டு படுகொலை செய்தாரோ அதிலும் பலமடங்காக இந்த மகிந்த ராஜபக்ச படுகொலைகள் புரிந்தார்.
இவரின் காலத்தில் வெள்ளை வானில் கடத்தப்பட்டு எத்தனையோ அப்பாவி பொதுமக்கள்  படுகொலை செய்யப்பட்டனர். மற்றும் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டும் படுகொலையும் செய்யப்பட்டனர்.
மேலும் தமிழ் அரசியல் தலைவர்களை திட்டமிட்டு படுகொலைகள் செய்தவர். மற்றும் பாடசாலை மாணவிகள் ,ஆசிரியர்கள் கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலைகள் செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர். அத்தோடு விடுதலைப்புலிகளின் போர்நிறுத்த காலத்தில் அத்துமீறி போரைத் தொடுத்தவர். அத்தோடு தமிழர் தாயகங்களுக்கு பொருளாதார தடையை கொண்டுவந்து மருந்துக்கள்,உணவுப்பொருட்கள் என்பனவற்றை முற்றுமுழுதாத தடைசெய்து தமிழ் மக்களை பட்டினியாலும் நோயாலும்  பாதிப்புக்குள்ளாகி இனப்படுகொலை புரிந்தவர். அதுமட்டுமல்லாது குழந்தைகள் அருந்தும் பால்மாக்களையும் தடைசெய்து பச்சிளம் பிள்ளைகள் பசியினால் துடிதுடித்து  இறக்கவும் காரணமாக இருந்தவர் இந்த மகிந்த ராஜபக்ச .
மேலும் ஸ்ரீலங்கா இராணுவத்திட்கும் விடுதலை புலிகளுக்குமிடையிலான கடுமையான போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அரசசார்பற்ற தொண்டுநிறுவனங்கள் அனைத்தையும் முழுமையாக போர் நடக்குமிடத்திலிருந்து வெளியேற்றிவிட்டு சென்சிலுவை சங்கம் போன்ற நிறுவனங்களையும் வெளியேற்றி விட்டு பன்னாட்டு ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளரர்கள் அனைவரையும் வெளியேற்றி எந்தவொரு செய்திகளும் வெளிசெல்லாத படி செய்துவிட்டு கொத்துக்குண்டு எரிகுண்டு இவையாவும் தமிழ் மக்கள் மீது வீசப்பட்டன .குறிப்பாக கொத்துகொண்டு எரிகுண்டு இரசாயன குண்டுகள் இவையாவும் சர்வதேச ரீதியால் தடை செய்யப்பட்டதொன்று இவ்வாறான குண்டுகளை பாவித்து ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள்களை கொன்று குவித்தனர்.
மேலும்  பொது மக்கள் அகதியாக உயிர் தப்பிக்கொள்வதற்காக ஓடும் பொது அவர்களை பாதுகாப்பு வலயம் என கூறி   பாடசாலைகளிலும் ஆலயங்களிலும் மருத்துவமனைகளிலும் தங்க வைத்து .திட்டமிட்டு   எறிகணை வீச்சுகளும் விமான குண்டுவீச்சுகளையும் அவ்விடங்களில்  நிகழ்த்தி  அந்த மக்களை படுகொலை செய்தவர் . இந்த தாக்குதல்களில் குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் வயோதிபர்கள் என ஆயிரக்கணக்கில்  படுகொலை செய்யப்பட்டனர் அத்தோடு பலர் கண்கள் இழந்து  கால் கைகள் இழந்து ஊனமாக்கப்பட்டிருக்கிறார்கள் . இன்றுவரை அவர்கள் யாவரும் ஊனமாகவே வாழ்கின்றார்கள்.
தமிழ் மக்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் திட்டமிட்டு இவரால் அழிக்கப்பட்டதுடன் இவரால் சூறையாடவும் பட்டது.
2009 இறுதிப்போர் நடக்கும்போது பொதுமன்னிப்பு தரலாம் ஆயுதங்களை வைத்துவிட்டு சரணடையும்படி கூறிவிட்டு சரணடைந்தவர்களை  கையையும் கண்ணையும் கட்டி அந்த இடத்திலேயே ஆண் பெண் பாகுபாடின்றி ஆடை களையப்பட்டு வன்கொடுமைக்குட்படுத்தி படு கொலைசெய்தார் . அத்தோடு பிரான்சிஸ் ஜோசெப் பாதிரியாரோடு சரணடைந்த  போராளிகள் மற்றும் அவரின் குடும்பத்தினர் அதாவது பெண்கள் குழந்தைகள் உட்பட பெற்றோரால் கையளிக்கப்பட்ட  நூற்றுக்கணக்கானவர்கள் இன்றுவரையும் காண்பிக்கப்படவும் இல்லை விடுதலை செய்யவும் இல்லை.
1,46,000 மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் கொன்று குவித்தவர் இவர். உலகத்திலேயே அதிக கொடுமைகளை புரிந்து படுகொலை செய்தவர்  என வர்ணிக்கப்படும் ஹிட்லர்.
 ஆனால் அவரை விட 21ம் நூற்றாண்டில் அதிகமான இன படுகொலைகளை புரிந்தவர் இந்த மகிந்த ராஜபக்ச .
 தமிழினத்தை அழித்து இலங்கையை ஒரு பௌத்த சிங்கள நாடாக மாற்றுவதற்கு இன்றுவரையும் துடித்து கொண்டிருக்கிறார் .
***இவர்காலத்தில் நிகழ்ந்த படுகொலைகள்***
ஜோசப் பரராசசிங்கம் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
ஸ்ரீலங்கப் புலனாய்வினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார் 25 .12.  2005.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 26-11-1934 திகதி பிறந்தார் இவர்  2005.12.25 ஆம் ஆண்டு  அன்று மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில்; நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொ ண்டிருந்தபோது ஸ்ரீலங்கப் புலனாய்வினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார் இவரின் மனைவியுட்பட மேலும் எழுவர் காயமடைந்தனர்
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் பத்திரிகையாளனாகத் தொடங்கி தமிழபிமானத்தால் அரசியல்வாதியாகிஇ வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெறுகின்ற மனிதஉரிமை மீறல்களை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் என்ற வகையில் அரசின் கவனிப்பைப் பெற்றவர் திரு.ஜோசப் பரராஜசிங்கம். தமிழரசுக்கட்சிஇதமிழர் விடுதலைக்கூட்டணி என்று தனது அரசியற்பணியை ஆரம்பித்து ஆயுதப்போராட்டம் முனைப்புப் பெற்ற காலம்வரை பல தசாப்தங்களைக் கண்டவர்.
பேசாலை வீட்டுத்திட்ட படுகொலைகள் 23.12.2005 சிங்கள கடற்படையால் வீட்டில் வைத்து 04 பேர் கொல்லப்பட்டனர்.
திருக்கோணமலையில் வைத்து  24 .01  .2006 ஸ்ரீலங்கப் படையினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சுப்பிரமணியம் சுகிர்தராஜன் 12. 12. 1969  பிறந்தார் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர். எஸ்.எஸ்.ஆர் என அழைக்கப்பட்டவர். சுடர் ஒளி பத்திரிகையில் ஊடகவியலாளராகப் பணியாற்றி வந்தவர். ஈழப் போர்க் காலத்தில் இவர் திருக்கோணமலையில் வைத்து 1. 24. 2006 ஸ்ரீலங்கப் படையினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சுகிர்தராஜன் மட்டக்களப்புக் குருமண்வெளியில் பிறந்தார். தந்தையார் சுப்பிரமணியம். தாயார் அருள் ஞானம்மா. இவர் தனது ஆரம்பக் கல்வியை மட்டக்களப்பு குருமண்வெளி சிவசக்தி வித்தியாலயத்திலும் உயர்கல்வியை மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மற்றும் மட்டக்களப்பு மத்திய கல்லூரி என்பவற்றிலும் பயின்றார்.
பாண்டிருப்பு கதிர்ப்பு கலை இலக்கிய வட்டத்தின் தாபகத் தலைவரான இவர் 1997 இல் இலங்கைத் துறைமுக அதிகார சபையில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார்.
திருகோணமலை நகரின் போர்ச் சூழலில் இருந்து பல செய்தி நிறுவனங்களுக்கு செய்திகளை வழங்கி வந்தார். சுடரொளிஇ உதயன் ஆகிய பத்திரிகைகளின் திருகோணமலை நிருபராகக் கடமையாற்றிய சுகிர்தராஜன் வீரகேசரிஇ மெற்றா நியூஸ் ஆகியவற்றில் அரசியல் கட்டுரைகள் எழுதிவந்தார். வீரகேசரியில் எஸ்.எஸ்.ஆர்இ மனோஇ ரஹ்மான் ஆகிய பெயர்களிலும் மெற்றா நியூசில் ஈழவன் என்ற பெயரிலும் துணிச்சலுடன் அரசியல் விடயங்களை வெளிச்சப்படுத்தி எழுதி வந்தார்.
திருகோணமலை மாணவர் படுகொலை 02.01.2006 அன்று திருகோணமலையில் மாணவர்கள் சந்திக்கும் இடத்தில் வைத்து சிங்கள இராணுவத்தினரால்  மற்றும் சிங்கள இனவெறியர்களால்  05 தமிழ் மாணவர்கள் கொல்லப்படனர்.
மானிப்பாய் படுகொலை 24.01.2006 அன்று மானிப்பாயில் வீட்டில் வைத்து சிங்கள இனவெறியர்களால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 03 பேர் கொல்லப்பட்டனர்.
திருகோணமலை படுகொலை 12.04.2006 அன்று திருகோணமலையில் கடை வீதியில் சிங்கள இனவெறியர்களால் 15 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
கொம்புவைத்த குளம் படுகொலை 13.04.2006 அன்று கொம்புவைத்தகுளம் பகுதியில் 03 பேர் கடத்தப்பட்டு சிங்கள இராணுவத்தால் கொலை செய்யப்பட்டனர், கொல்லப்பட்டவர்களின் முகங்கள் திராவகம் ஊற்றி சிதைக்கப்பட்டிருந்தன.
புத்தூர் படுகொலை 18.04.2006 இல் 05 தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் கடத்தி செல்லப்பட்டு கொல்லப்பட்டனர்.
மூதூர் குண்டுவெடிப்பு 25.04.2006 அன்று மூதூர் கிராமத்தின் மீதான சிங்கள முப்படையினரின் குண்டுத்தாக்குதலால் 12 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
உதயன் பத்திரிகை தாக்குதல்  02.06.2006 அன்று யாப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை அலுவலகத்தின் மீதான சிங்கள இராணுவத்தின் திட்டமிட்ட துப்பாக்கிச்சூட்டால் அங்கு பணியாற்றும் 02 பேர் கொல்லப்பட்டனர்.
நெல்லியடி படுகொலை 04.05.2006 அன்று நெல்லியடியில் பொதுமக்கள் மீதான சிங்கள இராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் 07 பேர் கொல்லப்பட்டனர்.
மந்துவில் கோவில் படுகொலை 06.05.2006 அன்று மந்துவில் கோவில் மீதான சிங்கள இராணுவத்தின் தாக்குதலில் 08 பேர் கொல்லப்பட்டனர்.
அல்லைப்பிட்டி படுகொலை 13.05.2006 அன்று அல்லைப்பிட்டியில் வீட்டிலிருந்த பொதுமக்கள் 13 பேர்  சிங்கள இராணுவத்துடன் இணைந்து துணை இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.
வட முனை கண்ணிவெடி படுகொலை 07.06.2006 அன்று சிங்கள இராணுவத்தினரின் கண்ணிவெடியில் சிக்கி பயணித்துக்கொண்டிருந்த 10 பேர் கொல்லப்பட்டனர்.
வங்காலை குடும்பம் படுகொலை 08.06.2006 அன்று வங்காலையில் சிங்கள இராணுவம் மற்றும்  துணை இராணுவத்தால் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த  மனைவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்து கணவனையும் குழந்தையயும் கொன்றும் தூக்கிலிட்டு சென்றனர் இந்த சம்பவத்தில் 04 பேர் கொல்லப்பட்டனர்.
கைதடி மனித புதைகுழி 2006 ஆம் ஆண்டு 06 ஆம் மாதமளவில் சிங்கள இராணுவத்தினால் கடத்தி கொலை செய்யப்பட்ட 04 பேரின் சிதைந்த உடலங்கள் கைதடியின் வெவ்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டன.
பேசாலை தேவாலய படுகொலை 17.06.2006 அன்று பேசாலை தேவலயத்தில் சிங்கள கடற்படையினரால் 04 பேர் கொல்லப்பட்டனர்.
மயிலம்பாவெளி படுகொலை 27.06.2007 அன்று அடையாளம் தெரியாதவர்களால் வீதியில் வைத்து 03 பேர் கொலை செய்யப்பட்டனர்.
முசலி படுகொலை 28.06.2006 அன்று சிங்கள இராணுவத்தினரால் முசலியில் வீதியில் வைத்து 03 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காயில் 29.06.2008 அன்று இலங்கை இராணுவ ஆழ ஊடுருவும் படையினரால் நிகழ்த்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் துணுக்காய் உதவி அரசாங்க அதிபர் நாகலிங்கம் நந்தகுமார் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்.
ACTION FAIM தொண்டு நிறுவன ஊழியர்கள் படுகொலை 05.08.2006 அன்று திருகோணமலை மூதூர் பகுதியில் சேவையில் ஈடுபட்டிருந்த பிரான்சை தலைமையகமாக கொண்டு இயங்கும் ACF (ACTION CONTRE LA FAIM) தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் சிங்கள இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
நெடுங்கேணி ஆம்புலன்ஸ் தாக்குதல் 08.08.2006 அன்று சிங்கள அரசின் ஆழ ஊடுருவும் அணியினால் அவசர மருத்துவ தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸ் வாகனத்திமீதான வெடிகுண்டுத்தாக்குதலில் 05 பேர் கொல்லப்பட்டனர்.
அல்லைப்பிட்டி ஏவுகணை தாக்குதல் 13.08.2006 அன்று அல்லைப்பிட்டியில் தேவாலயம் ஒன்றில் தஞ்சமடைந்திருந்த மக்களை சிங்கள இராணுவத்தினர் மனித கேடயமாக பயன்படுத்தி 12 பேரை கொலைசெய்தார்கள்.
செஞ்சோலை மாணவர்கள் தாக்குதல்  14.08.2006 அன்று வள்ளிபுனத்தில் செஞ்சோலை மாணவர்கள் மீதான சிங்கள வான்படையின் குண்டுத்தாக்குதலில் 54 மாணவர்கள் உடல் சிதறி பலியாகினர். வன்னி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் இருந்து முதலுதவி கற்கைநெறி முகாமிற்காக வந்திருந்த மாணவ மாணவிகளே இந்த தாக்குதலில் பலியாகியவர்கள்.
பொத்துவில் படுகொலை 17.09.2006 அன்று சிங்கள இராணுவ விசேட அதிரடிப்படையினரால் பொத்துவிலில் அமைந்திருக்கும் வங்கி ஒன்றின்மீதான தாக்குதலில் 10 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
புதுக்குடியிருப்பு குண்டுவீச்சு 16.10.2006 அன்று சிங்கள இராணுவ சிறப்புப்படையினரால்  வீடு ஒன்றின்மீதான தாக்குதலில் 04 பேர் கொல்லப்பட்டனர்.
கிளிநொச்சி மருத்துவமனை குண்டுவீச்சு 02.11.2006 அன்று கிளிநொச்சி அரச மருத்துவமனை மீதான சிங்கள வான்படையின் குண்டுவீச்சில் 05 பேர் கொல்லப்பட்டனர். இதில் மருத்துவர்கள் சிலரும் நோயாளிகள் பலரும் காயப்பட்டு வைத்தியசாலை சேதமாகியது.
யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட நடராஜா ரவிராஜ் இ ஜூன் 25, 1962 பிறந்தார் -நவம்பர் 10, 2006  கொழும்பில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார் சட்டத்தரணியும் யாழ்ப்பாணமாவட்டதமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.
2006 நவம்பர் 10 வெள்ளிக்கிழமை அன்று காலை 7:00 மணிக்கு ரவிராஜ் தெரன தொலைக்காட்சியில் நடந்த ஒரு நேரடி நேர்காணல் ஒன்றில் பங்குபற்றிவிட்டு வீடு திரும்பி பின்னர் மீண்டும் வீட்டை விட்டு தனது வாகனத்தில் வெளியேறிய போது காலை 8:45 மணியளவில் கொழும்பு நாரகேன்பிட்டிய மனிங்டவுனில் உள்ள அவரது வீட்டுக்கருகில் விசையுந்து ஒன்றில் வந்த இரண்டு இனந்தெரியாதோரால் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.ஜ1ஸ கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிராஜ் சிகிச்சை பலனின்றி காலை 9.20 மணிக்கு உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ் பரி யோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் 1987 ஆம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதிவு செய்தார். ரவிராஜின் ‘ரவிராஜ் அசோசியேட்ஸ்’ எனும் சட்ட நிறுவனமானது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகள், அவசரகாலச் சட்டத்தின் கீழான வழக்குகளுக்காக வாதாடியது. கொழும்பில் மனிதஉரிமைகள்சட்டத்தரணியாகவும் பணியாற்றினார்.
தமிழீழத்தின் அதியுயர் தேசிய விருதான மாமனிதர் விருது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் வழங்கப்பட்டது.
வவுனியா விவசாய கல்லூரி மாணவர் படுகொலை 18.11.2006 அன்று வவுனியாவில் உள்ள விவசாய கல்லூரியில் வைத்து 04 மாணவர்களை சிங்கள இராணுவத்தினர் கொலை செய்தனர்.
வவுனியா விவசாய கல்லூரி மாணவர் படுகொலை
கிழக்குப்பகுதி படுகொலை 08.12.2006 அன்று இலங்கையின் கிழக்கு மாகாண தமிழர் வாழும் பிரதேசங்களில் 184 அப்பாவி தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டனர்.
விடுதலை புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தற்கும் இடையிலான இறுதி போரின் போது (15.05.2009 – 18.05.2009 ) இலங்கை இராணுவத்தின் ஆட்லரி தாக்குதல், கடற்படையினரின் எறிகணைத்தாக்குதல், விமானதாக்குதல்,, எரிகுண்டு தாக்குதல், கொத்துக்குண்டு வீச்சு ( சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட குண்டுகள்) இராணுவ டாங்கி தாக்குதல் போன்ற பலவேறுபட்ட கொடூர தாக்குதலில் முள்ளிவாய்க்கால் பகுதியில் 2 சதுர கிலோமீட்டர்  பிரதேசத்தில் ஒதுங்கியிருந்த 1 லட்சத்துக்கும் மேட்பட்ட மக்களில் 25,000 பேர் தாக்குதல் நடந்த கணங்களில் படுகொலை செய்யப்பட்டதும் . காயப்பட்ட 25,000 மக்கள் சிகிச்சையின்றியும் மேலும் இராணுவத்தினரின் டாங்கி வாகனங்கள் பதுங்கு குழிகளிலிருந்த மக்களை மூடியதுமாக அவர்கள் பலியானார்கள்  .
அத்தோடு இறுதியுத்தத்தில் உயிருடன் எஞ்சியிருந்த போராளிகளுக்கு பொது மன்னிப்பு தரலாம் என அரசாங்கம் கூறி அவர்களை ஆயுதங்களை வைத்துவிட்டு  சரணடையுமாறு கூறி  வெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்த போராளிகளில் சிலரை உடனே படுகொலை செய்தனர் எஞ்சிய சில போராளிகளின்  கைகள் மற்றும் கண்களை கட்டி ஆடைகள் களையப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கியும் பெண் போராளிகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியும் படுகொலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
2009 இறுதி போரில் ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 46 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக அரச சார்பற்ற நிறுவனங்களும் தொண்டு நிறுவனங்களும் தெரிவிக்கின்றன.
அத்தோடு பொது மன்னிப்பு தரலாம் என்ற அறிவித்தலின் படி பாதர் பிரான்சிஸ் ஜோசெப் இன் தலைமையில்  சரணடைந்த நூற்றுக்கணக்கான போராளிகள் மற்றும் போராளிகளின் குடும்பங்கள்  அதாவது  பெண்கள்  சிறுவர்கள் வயோதிபர்கள் என நூற்றுக்கணக்கானோர்  இதுவரையும் விடுதலை செய்யவும் இல்லை அவர்களை காண்பிக்கப்படவும்  இல்லை. இன்றுவரையும் அவர்களை கையளித்த பெற்றோர்கள் தேடி அலைகிறார்கள்.
இந்த படுகொலைகள் யாவிட்கும் சர்வதேச போர் விதிமுறைகளை மீறியவரும் இனப்படு கொலையாளருமான  இலங்கையின் சனாதிபதி மகிந்த ராஜபக்சவே  காரணமாவார்.
நன்றி.
ம. கஜன்
அனைத்துலக மனித உரிமைச்சங்கம் பிரெஞ்சு
00 33 1 45 98 89 49 0033 75 80 870 84
Email [email protected]