தமிழின அழிப்பு ஆதாரங்கள் .ரணில் விக்ரமசிங்க 1977 இல் இருந்து இன்று வரையும் .

826

மறைக்கப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பு ஆதாரங்கள்.

யாரிந்த ரணில் விக்கரமசிங்ஹே?

ரணில் விக்ரமசிங்க
1977 இல் இருந்து   இன்று வரையும் .
தமிழ் மக்கள் மத்தியில் தன்னை நீதி தேவனாகவும் சர்வதேச நாடுகளுக்கு சமாதான தூதுவனாகவும் விளம்பரம் செய்யும் இவரின் உண்மையான முகம் என்ன?
ரணில் விக்கிரமசிங்கவும், மகிந்த ராஜபக்சவும், சிங்களப் பௌத்தப் பேரினவாதத்தின் வெவ்வேறு முகங்களே தவிர, அடிப்படைக் கோட்பாட்டில் ஒன்றிணைந்தவர்களே ஆவார்கள்.
1977 இல் அரசியலில் நுழைந்து கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தன் அரசியல் பயணத்தை தொடர்ந்த ரணில் விக்கிரமசிங்க 1993 முதல் 1994 வரையிலும், பின்னர் 2001 முதல் 2004 வரையிலும் இலங்கையின் பிரதமராகப் பதவியில் இருந்துள்ளார். இவர் பிரதமராக இருந்த காலப்பகுதியில் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்.
1994 இல் இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்த காலப்பகுதியில்
விஜேதுங்க புதிய சனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
 பின்னர் சனாதிபதி குமாரதுங்க. ரணில் விக்கிரமசிங்கவின் அரசைக் கலைத்ததை அடுத்து ரணிலின் பதவிக்காலம் முடிவடைந்தது. 2005 இல் புதிய பொதுத் தேர்தல் இடம்பெற்றது.
2015 சனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதை அடுத்து நல்லாட்சிக்கான 100-நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தில் பெரும்பாண்மை பலமில்லாத ஐக்கிய தேசியக் கட்சியின்தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக அறிவிக்கப்பட்டார்.
2015 ஆகஸ்ட் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின்  தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சி அமைக்க 7 இடங்கள் தேவையாக இருந்தது. இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்திய குழு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து இரண்டு ஆண்டுகளுக்கு தேசிய அரசு அமைக்க ஒப்புக் கொண்டது. ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் 22வது பிரதமராகப் பொறுப்பேற்றார்.
2015 தொடக்கம்  இன்றைய நிலை வரை  சிறிலங்கா அரசின் பிரதமராக
ரணில் விக்கிரமசிங்க பதவி வகித்து வருகிறார்.
ரணில் விக்கிரமசிங்கவும் சரி, அவர் சார்ந்து நிற்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியும் சரி அன்றிலிருந்து இன்றுவரை தமிழர்களின் நலனுக்கு எதிராகவே செயல்பட்டு வந்திருப்பதைத்தான் வரலாறு சுட்டிக் காட்டுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் நெடுங்காலத் தமிழர் விரோதப் போக்குக்கும், ரணில் விக்கிரமசிங்கவின் நசூக்கான தமிழர் விரோதப் போக்குக்கும் அடிப்படை வித்தியாசம் எதுவுமில்லை.
சமாதான ஒப்பந்தங்களைப் போடுவதும், பின்னர் அதனைக் கிழித்தெறிவதும், மற்றவர்கள் கொண்டு வருகின்ற திட்டங்களை எதிர்ப்பதும் இவர்களுக்கு வழக்கமான வேலையாக இருந்து வருகின்றது. முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமராக இருந்த டட்லி சேனநாயக்க, தமிழர் தரப்புடன் செய்து கொண்ட டட்லி – செல்வா ஒப்பந்தம்  தூக்கியெறியப்பட்டது.
பின்னர் இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்படுகின்ற வேளையில், ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்க அந்த ஒப்பந்தத்தை வன்மையாக எதிர்த்தார். அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட சிறிலங்காவின் முன்னாள் அரச அதிபரும், ரணிலின் உறவினருமான ஜேஆர் ஜெயவர்த்தனா ரணிலை இரகசியமாகக் கேட்டுக் கொண்டதன் பேரில் ரணில் இவ்வாறு செய்தார் என்றும் அப்போது பேசப்பட்டது.
சந்திரிக்கா அம்மையார் பதவிக்கு வந்தபோது, அவர் உருவாக்க முனைந்த தீர்வுத் திட்டத்தை ரணில் விக்கிரமசிங்க எதிர்த்தது மட்டுமல்லாது அந்தத் தீர்வுத் திட்டப் பிரதிகளை எரிக்கவும் செய்தார்.
இரண்டு தடவைகள் அமைச்சராகவும்
இரண்டு தடவைகள் எதிர்க்கட்சி தலைவராகவும்
1994 தொடக்கம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராகவும்
மூன்றாவது தடவையாக பிரதமராகவும்
பதவி வகித்துவரும் ரணில் விக்கிரமசிங்ஹே பொறுப்புள்ள பதவி நிலைகளை கடந்துவந்த போதிலும் எந்த தருணத்தில் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத வன்முறைகளையோ கொடிய போரையோ எந்தவொரு தருணத்திலும் இவர் எதிர்த்ததேயில்லை மாறாக அவற்றை ஆதரிக்கும் வகையிலேயே அறிக்கைகள் வெளியிட்டார்.
1980 தொடக்கம் 1989 வரை ஜே ஆர் ஜெயவர்தனே சனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் கல்வி அமைச்சராக பதவி வகித்தார் ரணில் விக்கிரமசிங்ஹே.
 1983,1987 ஆண்டு காலப்பகுதியில் தமிழர்கள் மீது சிங்கள இனவெறியர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரங்கள் நடைபெற்றன.
 இந்த இரு வருடமும் தமிழர்கள் பலர் வெட்டியும் சுட்டும் கொலை செய்யப்பட்டார்கள்,பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்,
தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன இதில் குறிப்பிடத்தக்க  விடயம் என்னவெனில் இந்த இனக்கலவரங்களுக்கு ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசிய கட்சி எந்தவிதமான எதிர்ப்பு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
 மாறாக மறைமுகமாக படுகொலைக்கு ஆதரவாக இருந்தவர் அந்தகாலப்பகுதியில் கல்வி அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்ஹே.
அதன் பின்னர் ‎1993-1994 வரை பிரதமராக பதவி வகித்தார் .
இந்த காலப்பகுதியிலும் பல்வேறு பகுதியில் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களும் வன் செயல்களும் இடம்பெற்றிருந்தன. இந்த தாக்குதல்களில்  1500 ற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
 அப்போதும் கூட தான் பௌத்த சிங்களவன் என்பதற்கு அமைவாக அமைதியையே கடைப்பிடித்து படுகொலைகள் பற்றி பெரிதும் பொருட்படுத்தாமல் இருந்தார்.
1994 இல் இலங்கையின் பிரதான கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே ஆண்டுதான் சந்திரிக்கா அம்மையார் சிறீலங்காவின் சனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார், இந்த சந்திரிக்காவின் ஆட்சிக்காலப்பகுதியில்தான் சமாதானத்திற்காக யுத்தம் என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் உக்கிரமாக யுத்தம் ஆரம்பித்தது. வான் மற்றும் தரை, கடல்வழி தாக்குதல்களினால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்,
பல இலட்சம்பேர் இடம்பெயர்ந்த பேரவலம் நடந்தது. அத்தோடு ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். அதன் விளைவாக செம்மணி புதைகுழியும் தோண்டப்பட்டது.
வழிபாட்டுத்தலங்கள்,பாடசாலைகள்,மருத்துவமனைகள் என்று எல்லா இடமும் இலக்குவைத்து தாக்கப்பட்டு கணிசமானோர் பலியானார்கள்.
 இவை மட்டுமல்லாது தமிழர்கள் வாழும் வன்னி,கிளி நொச்சி,மட்டக்களப்பு,அம்பாறை,யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் திட்டமிட்ட இன அழிப்பு யுத்தம் முனைப்பு பெற்றது.
 இவையெல்லாம் நடந்த காலப்பகுதியில் ஒரு நாட்டின் பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவராக ரணில் விக்கிரமசிங்ஹே நடந்துகொள்ளவில்லை.
 தமிழர்களுக்கு எதிராக நடந்த அக்கிரமங்களை நியாயப்படுத்தும் விதமாக நடந்து கொண்டார்..
2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களின் பெறுபேறாக ‎2001-2004 வரை இரண்டாவது தடவையாக பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்ட ரணில் இந்த காலப்பகுதியை சமாதானம் என்ற போர்வையில் தமிழர்களையும் தமிழ் அமைப்புக்களையும் பலவீனப்படுத்த தன்னால் முடிந்தவரை தந்திரமாக செயற்பட்டார்.
சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தான போதும் அதன் பின்னரும் தமிழீழ விடுதலை புலிகளின் போராளிகள் சிறிலங்கா இராணுவத்தால் இந்த காலப்பகுதியில் கொல்லப்பட்டனர்,
அதே போல நல்லெண்ண பேச்சுவார்த்தை என்ற போர்வையில் இலங்கையில் நடப்பது உள் நாட்டு பிரச்சனையே தவிரவும் எல்லா இனங்களும் ஒற்றுமையாக வாழ்கின்றன என்ற பொய்யான பிரச்சாரத்தை சர்வதேச நாடுகளில் முன்னெடுத்தார்.
அத்துடன் இதற்கு முற்பட்ட காலத்தில் சிறிலங்கா இராணுவம் செய்த அட்டூழியங்களை இல்லாது செய்வதற்கும் முனைப்பு காட்டினார்.
2005 இல் மகிந்த ராஜபக்சே சனாதிபதியானதும் ரணில் மீண்டும் எதிர்கட்சி தலைவரானர் இந்த காலப்பகுதிதான் தமிழர்களின் வரலாற்றில் அதிகமான படுகொலைகள் ஸ்ரீலங்கா அரசினரால் இடம்பெற்றன. ஆட்சிக்கு வந்ததுமுதலே தன்னுடைய இனவாத முகத்தை காட்ட ஆரம்பித்த மகிந்த
 சிறிலங்கா என்பது சிங்கள மக்களின் நாடு இங்கு சிங்கள மக்களுக்கு மட்டுமே வாழவும் ஆளவும் உரிமை உண்டு என முழங்கினார் .
அதன்படியே மெல்ல மெல்ல தமிழர் பிரதேசங்கள்மீது அடக்குமுறையை ஏவிவிட்டு சிங்கள பேரினவாதத்தை தென்னிலங்கையில் ஆழமாக ஊன்றி  தமிழர்களுக்கெதிரான படுகொலைகள் பலதும் செய்தார் .
இவர் செய்த படுகொலைகளை எதிர் கட்சி தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க தடுக்கவோ நிறுத்தவோ முற்படவில்லை மாறாக மறைமுகமாக படுகொலைகளுக்கு ஆதரவாகவே அன்று செயற்பட்டார்.
இன்றும் கூட பிரதமராக இருந்து இனவழிப்பை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார் இந்த ரணில் விக்கிரமசிங்க.
இவர் அரசியலுக்கு வந்த நாளிலிருந்து இன்று வரையும் தமிழ் மக்களுக்கெதிரான இனப்படுகொலைகள் யாவிலும் இவரின் பங்களிப்பு  நேர்முகமாகவும் மறைமுகமாகவும் இருந்துகொண்டே இருக்கிறது.
குறிப்பு:- இதில் தரப்படும் தமிழின படுகொலை பற்றிய விபரங்கள் முழுமையான தொகுப்பல்ல
போர்க்கால சூழலில் சில படுகொலைகள் பற்றிய விபரங்கள் தவற விடப்பட்டுள்ளன. எம்மால் அறியப்பட்ட கிடைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இந்த தொகுப்புகள் தொகுக்கப்பட்டுள்ளது.
நோக்கம்:- இதில் எழுதப்பட்டுள்ள விடயங்கள் ஸ்ரீலங்கா அரசினால் திட்டமிட்டு  தமிழருக்கெதிரான படுகொலைகள் இன்றுவரையும் இடம்பெற்று கொண்டிருக்கிறது.  இதை பார்க்கும் நீங்கள் எம்மினத்தை  காக்க உதவுங்கள்.
நன்றி.
ம. கஜன்
அனைத்துலக மனித உரிமைச்சங்கம்   பிரெஞ்சு
 00 33 1  45 98 89 49   0033 75 80 870 84