மனதை உலுக்கிய ஓர் சம்பவம் மாங்குளத்தில்

12080

மனதை உலுக்கிய ஓர் சம்பவம் மாங்குளத்தில்

அனுராதபுரம் சிறைச்சாலை வரை எம்மோடு கால் நடையாக வர முயற்சித்த பாடசாலை மாணவர்கள்.

மாங்குளம்  பகுதியில் எமது நடைபயணம் சென்றடைந்த போது

மாங்குளம் மகா வித்தியாலய மாணவர்கள் நடைபயணத்திற்க்கு ஆதரவு தெரிவித்து வீதியில் ஓர் கவனயீர்பு போராட்டத்தை மேற்கொண்டது மட்டுமல்லாமல் அதனைத்தொடர்ந்து

பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து அனுராதபுரம் வரை தமது நடைபயணத்தை மேற்கொள்ளவிருந்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்நிலையில் மாணவர்களின் மனம் பாதிப்படையா வண்ணம் சில மைல் தூரம் அவர்களையும் எம்மோடு இணைத்து நடைபயணத்தினை மேற்கொண்டு பின்னர் அப் பாடசாலை மாணவர்களிடம் உங்களுக்காக அண்ணாக்கள் நாங்கள் செல்கின்றோம்.

நீங்கள் பாடாசாலைக்கு செல்லுங்கள் என அன்பாகக் கேட்டுக்கொள்ள அவர்கள் பிரிய மனமின்றி பிரிந்த சம்பவம் பலரது மனங்களை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது

SHARE