அவசரமாய்  வெள்ளையடிக்கும்இரட்டை இனத்துரோகி

336

தமிழ் மக்களின் குரலாக மட்டும் ஒலிப்பதற்காக இரண்டாவது முறையும் மக்கள் நம்பிக்கையோடு தெரிவு செய்து இன்று அந்த மக்களுக்கு துரோகத்தை இழைத்த இனத்துரோகியான சிறீதரன் தற்போது அவசரஅவசரமாக தன்னை சுற்றவாளியாக வெள்ளையடிக்க முயன்றுகொண்டிருக்கின்றார்.இதற்குள் பெரிதாக ஒன்றும் தமிழின நலன் கிடையாது அனைத்தும் தன் கதிரையையும் தன்னைச்சுற்றியுள்ள அரசியல் ஞானமற்ற வெறும் கூட்டத்தையும் தக்கவைக்க செய்கின்ற குறளி வித்தை.கடந்த பொதுத்தேர்தலில் தெரிவு செய்யபப்;பட்ட சிறீதரன் அதுவரை மகிந்தராஜபக்ச காலத்தில் எனது நோக்கம் அபிவிருத்தி அல்ல நிரந்தரமான இனப்பிரச்சனைக்கான தீர்வு சுயநிர்ணய அடிப்படையில் எமது தாயகத்தில் வாழ்வதே இலக்கு என்று கூறியதுடன் கிளிநொச்சியில் அபிவிருத்தி சார் அரசியலை மேற்கொண்டவர்களை புறந்தள்ளிய அரசியலை மேற்கொண்டார்.தற்பொழுது 2015ன் பின் சிறீதரனின் நிலை என்னவெனில் ரணில் மைத்திரி தலைமையிலான பங்காளி அரசியலில் அதாவது இணக்க அரசியலில் சம்மதமானார்.மிக அற்பத்தனமான கொள்கை மாற்றம்.வெகுவிரைவில் தமிழ்; தேசிய கூட்டமைப்பினால் அரசாங்கத்திடம் பெறப்பட்ட எதிர்கட்சித்தலைவர் பதவி குழுக்களின் பிரதிதவிசாளர் பதவி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் என்ற அரசாங்க முகவர் பதவிகள் என்பவற்றுக்கு எந்தவிதமான விமர்சனங்களையோ முன்வைக்காமல் இதனால் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா இல்லையா என்ற விவாதங்கள் இன்றி இந்தச் சிறீதரன் ஆமோதித்து பதவி சுகத்தை அனுபவிக்க தயாரானார்.

கடந்த பொதுத்தேர்தலின் பின் ரணில் மைத்திரி அரசாங்க முகவர் பதவிகளான மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவி ஆரம்பத்தில் சிறீதரனுக்கு வழங்கப்படவில்லை.கிளிநொச்சிக்கும் மாவை சேனாதிராஜாவே சிபார்சு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.ஆனால் பிறகு கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவி சிறீதரனுக்கு கிடைத்தது.அது எவ்வாறு ரணிலின் கையொப்பத்துடன் கிடைத்தது என்பதை ஊடகங்கள் தகவல்கள் அறியும் சட்டத்தின் மூலம் பெற்றுக்கொண்டு மக்களுக்கு சிறீதரனை தோலுரிக்க வேண்டியது காலத்தின் தேவை.சிறீதரன் ரணில் விக்கிரசிங்கவுக்கு தன் கைப்பட கடிதம் எழுதி தனக்கு கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியைபெற்றுக்கொண்டார்.அப்போது சிறீதரனுக்கு சம்மந்தன் சுமந்திரன் ரணில் மைத்திரி எல்லோரும் நல்லவராகவே தெரிந்தார்.முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன் கெட்டவராக தெரிந்தார்.ஏன் கடந்த சிலவாரங்களுக்கு முன்பு கூட விக்னேஸ்வரன் கட்சி தொடங்குவது பற்றி பகிரங்கமாக சிறீதரன் விமர்சித்தார்.தற்பொழுது அவசரமாக சம்மந்தன் சுமந்திரனில் பிழை கண்டுபிடித்து சிறீதரன் தன்னை வெள்ளையடிக்க முயல்வது எவ்வளவு கோமாளித்தனம் என்பதை சிறீதரன் புரிந்துகொள்ளக்கூடிய அளவுக்கு சிறீதரனிடம் அரசியல் ஞானம் கிடையாது.

கடந்த ரணில் மைத்திரி ஆட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேடமாக தலா 2 கோடிகள் ஒவ்வொருவருக்கும் ரணிலின் அமைச்சினால் ஒதுக்கப்பட்டது.அப்போதுகூட அந்த எலும்பை பாய்ந்து கவ்வும்போதும் சிறீதரனுக்கு சம்மந்தன் சுமந்திரன் ரணில் மைத்திரி சிறீதரனுக்கு பிழையாக தெரியவில்லை.அப்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறான வழியில் செல்கின்றது என விமர்சித்த பலரும் சிறீதரனுக்கு பிழையாக தெரிந்தார். விமர்சித்ததற்காக சிறீதரன் சிறீங்கா காவல் துறையிடம் பலரை கொண்டுபோய் முறைப்பாடு செய்தார்.பின் சிறீலங்கா காவல் துறையால் அவர்களில் பலர் இனத்துரோகி சிறிதரனால் காட்டிக்கொடுக்கப்பட்டு விசாரிக்கபட்டார்கள்.அப்போதெல்லாம் சம்மந்தன் சுமந்திரன் ரணில் மைத்திரி சிறீதரனுக்கு இனிப்பாகவே இருந்தார்கள்.இனப்படுகொலையாளியைஎதிர்ப்பவர்கள்கசப்பானவர்களாகவே தெரிந்தார்கள்.

அதன் பின் சிறீதரன் தான் இனத்தின் துரோகியென்பதை நிரூபிக்க மிக உச்சபட்சமான விடயங்களை சம்மந்தன் சுமந்திரன் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு ரணில் மைத்திரி அரசாங்கம் சார்பாக செய்திருக்கின்றார்.அதில் மிக முக்கியமானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு காரணமான சிறீலங்காவின் சிங்கள இனப்படுகொலையாளிகள் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கபடவேண்டுமென பாதிக்கப்பட்டவர்களும் புலம்பெயர் மனித உரிமை வாதிகளும் தமிழக உணர்வாளர்களும் வாதிட பாதிக்கபட்ட மக்களின் பிரதிநி திகளான தமிழ் தேசிய கூட்;டமைப்பு அதையெல்லாம் கணக்கில் கொள்ளாது இன்றைக்கு மிக கேவலமான ஜனநாயக விழுமியத்தை மீண்டும் காட்டியுள்ள சிங்களவர்களின் பிரநிதிதிகளான ரணில் மைத்திரி சார்பாக உள்ளகவிசாரணைக்கும் ஒப்புக்கொண்டு இனப்படுகொலையாளி ஆசுவாசமாக அரசியலில் ஈடுபட இரண்டு வருட அவகாசத்தையும் பெற்றுக்கொடுத்து இதுவரை கொல்லப்பட்ட இலட்சம் கடந்த தமிழின ஆன்மாக்களின் கனவில் மண் அள்ளிப்போட்டனர்.அதில் சிறீதரனும் பங்காளியாக இருந்தார்.அப்போதும் கூட சிறீதரனுக்கு சம்மந்தன் சுமந்திரன் ரணில் மைத்திரி மிக நல்லவர்களாகவே தெரிந்தார்.ஏனெனில் சிறீதரனுக்கு கோடிக்கணக்கான பெறுமதியான வாகன அனுமதிப்பத்திரம் அதை சிங்களவர்களுக்கு விற்றுப்பெற்ற பணம்.அதைவிட ரணில் வழங்கிய மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவி என்ற அரசாங்க முகவர் பதவி சிறீதரனின் கண்ணை மறைத்தது.பிறகு எப்படி இப்பொழுது அவசரஅவசரமாக சம்மந்தன் சுமந்திரன் ரணில் கெட்டவராக முடியும்.

அடுத்தது பெல்ஜியம் சென்று ஜி எஸ் பி சலுகையை மீளப்பெற இலங்கையில் இப்பொழுது பிரச்சனையில்லை.நாட்டில் நல்லாட்சி உண்டு என பிரசங்கம் செய்த குழுவிலும் சிறீதரன் இடம்பெற்று இருந்தார்.அப்போதெல்லாம் அதை விட்டுவிட்டு சிறீதரன் எனக்கு இது பிடிக்கவில்லையென கிளிநொச்சிக்கு சிறீதரன் ஓடிவரவில்லை.ஆனால் இப்பொழுது சம்மந்தரும் சுமந்திரனும் ரணிலும் பிடிக்கவில்லையாம் சிறீதரனுக்கு.இதற்குள் காரணம் பெரிதாக தமிழின விசுவாசம் கிடையாது.கதிரை விசுவாசம் மட்டுமே.அதாவது பொதுத்தேர்தலையோ அல்லது மாகாண சபை தேர்தலையோ எதிர்கொள்ளவேண்டிய தேவை மிக நெருக்கமாக உள்ளது.எனவே இவ்வாறான ஒரு குத்திக்கரணத்தை சிறீதரன் அடித்து தன்னை மட்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் நல்லபிள்ளையாக காட்டி தப்பித்துக்கொள்ள முயல்வதை இரட்டை துரோகம் என அழைப்போம்.அதாவது தனது இனத்துக்கு துரோகம் இழைத்து இதுவரை தவறான பாதையில் சென்று கொண்டிருந்தபோது அதை தட்டிக்கேட்காமல் ஒத்துழைத்து சுகபோகங்களை அனுபவித்தது.இரண்டாவது சரியோ தவறோ தனது கட்சி ஒரு தீர்மானத்தை எடுத்து நகர்கின்றபோது அதை குழப்பி வெளியேறுவது.இதன் மூலம் சிறீதரன் எத்தகைய விலாங்கு என்பதை மக்கள் உணரலாம்.

அடுத்தது வடக்கு மாகாண சபை சீரழிவிலும் சிறீதரனின் பங்கு அளப்பரியது.தனக்கு பாடசாலை அதிபராக இருந்த காலத்தில் பதவி தந்தவர்கள் பதவி உயர்வு தந்தவர்களுக்கு நன்றிச்சோறு போடுவதற்கு மக்களின் வாக்குகளை பயன்படுத்தி அவர்களை மாகாண சபைக்கு அனுப்பியதும்.முதலமைச்சருக்கு வால்பிடித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் மற்றும் சுமந்திரனோடு முரண்பட்டதும் பிறகு பொதுத்தேல்தல் வர கதிரைக்கு தமிழரசு கட்சி விசுவாசியாக மாறி தேர்தல் கேட்டதும்.பிறகு முதலமைச்சரை கவிழ்க்க ஒத்துழைத்த குருகுலராசாவுக்கும் பசுபதிபிள்ளைக்கும் ஆதரவு வழங்கி ஊக்குவித்ததும் என்று சிறீதரன் வடக்கு மாகாண சபை சீரழிவுக்கு மிக காரணமாக இருந்தார்.இப்பொழுது சம்மந்தன் சுமந்திரன் பிழையான வழியில் செல்கிறாரென தூக்கி எறிந்துவிட்டு அவசரஅவசரமாக கிளிநொச்சியில் தன் பக்க பாட்டுக்களை அழைத்து கூட்டம் வைத்து தன்னை வெள்ளை அடிக்க முயல்வது வேறொன்றுக்குமல்ல அடுத்த வாகன அனுமதிப்பத்திரம்.பதவிகள் சுபோகங்களுக்கு மட்டுமே!

சிறீதரன் அரசாங்க நிகழ்ச்சி நிரலில் நீளக்கயிற்றில் கட்டப்பட்ட மந்தை.மாவீரர்கள் புலிகள் பிரபாகரன் போன்ற வாசங்கள் சிறீதரனிடம் அரசாங்கம் தாராளமாக அனுமதிக்கும்.விசாரணைக்கு என்றழைத்தும் அவரை மக்கள் மத்தியில் அவர் பற்றிய ஒரு மாயையை உருவாக்கி மேலே கொண்டுவரும் தெற்கு அரசியலில் தங்கள் தேவைக்கு பச்சோந்தியாய் மாறக்கூடிய ஒரு சிறிதரன் என்ற புலிச்சாயம் தேவை.அந்த சாயத்தின் மீது தெற்கு அரசியல் 2015ன் பின் மழை பெய்யவிட்டது சிறீதரனின் சாயம் வெளுத்துவிட்டது.இந்தச்சாயத்தை சுமந்திரன் சம்மந்தன் போன்றவர்கள் மீது அரசாங்கத்தால் தெளிக்கமுடியாது காரணம் அவர்கள் வெளிப்படையாக புலிகளை விமர்சிப்பவர்கள்.எனவே சிறீதரன் போன்ற மாயைகள் தெற்கு அரசியலுக்கு தேவை.இந்த மாயைக்குள் தமிழ் மக்கள் விழுந்துவிடாதிருப்பது இனி மிக அவசியம்.

 

SHARE