விடுதலையின் வேர்கள் விதைக்கப்பட்ட (டடி) முகாமில் விக்ரமின் அம்மா விளக்;கேற்றினார்

597
விடுதலையின் வேர்கள் விதைக்கப்பட்ட( டடி) முகாமில் விக்ரமின் அம்மா விளக்கேற்றினார்
தமிழீழ தேசிய மாவீரர் நாளில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆரம்ப காலப்பகுதியான எண்பதுகளில் களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களை விதைத்த முல்லைத்தீவு கானகப்பகுதியில் இருக்கும் ( டடி )முகாம் கோடலிக்கல்லு துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு உணர்வு பூர்வமாக சிறப்பான முறையில் வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
கானகப்பகுதியான கோடலிக்கல்  (டடி )முகாம் துயிலும் இல்லத்தில் 99 மாவீரர்கள் விதைக்கப்பட்டனர்.முதன்முதலில் ஒரே களமுனையில் இருவர் வீரச்சாவடைந்த மாவீரர்கள் வித்துடல்கள் அங்கு விதைக்கப்பட்டுள்ளது.  இரண்டாம் லெப்டினன்ட் விக்ரம் ரமேஷ் . அங்கு அவருடைய சகோதரர்கள் வருகை தந்து வணக்கம் செலுத்தினர்.பிரதான சுடரை  2 வது லெப்.விக்ரமின் தாயார் கிருஸ்ணபிள்ளை மகாலக்சுமி ஏற்றிவைத்தார்.
கோடலிக்கல் துயிலுமில்லத்தின் நடைபெற்ற மாவீரர் தின வணக்க நிகழ்விற்கு தாயகத்தின் பல பாகங்களிலும் வசிக்கும் 99மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் வருகை தந்திருந்தனர்.அவர்களுக்கு போக்குவரத்து வசதி உணவு வசதி என்பன ஏற்பாட்டாளர்களால் வழங்கப்பட்டது.
வணக்க நிகழ்வு நடந்தவேளையில் பொலிசாரும் வனத்துறையினரும் புலனாய்வாளர்களும் அங்கு பிரசன்னமாயிருந்தனர்.அவர்கள் மக்களுக்கு எந்தவித இடையூறுகளையும் கொடுக்கவில்லை.வனப்பகுதி ஆதலினால் அவ்விடத்திற்கு பேரூந்துகள் வர முடியாத நிலை இருந்தது.நிகழ்வு முடிந்த வேளை பேரூந்து நின்ற பகுதிக்கு மக்களை அழைத்துச்சென்று விடுவதில் பொலிசாரும் தமது வாகனத்தில் ஏற்றி உதவி இருந்தனர்.
இது தொடர்பில் கோடாலிக்கல் துயிலுமில்ல ஏற்பாட்டாளர்கள் நிகழ்விற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.விசேடமாக வனத்துறையினருக்கும் பொலிசாருக்கும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்திருந்தனர்.

 

SHARE