மட்டக்களப்பு போலீசார் மீது மேற்கொள்ளப்பட்ட சூட்டுச்சம்பவம் கடந்த காலங்களில் இயங்கிய ஆயுதக் குழுக்களே காரணம்

253

மட்டக்களப்பு போலீசார் மீது மேற்கொள்ளப்பட்ட சூட்டுச்சம்பவம் கடந்த காலங்களில் இயங்கிய ஆயுதக் குழுக்களே காரணம்

அதாவது மட்டக்களப்பு வவுணதீவுப்பகுதியில் இரு போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கடந்த காலங்களில் மஹிந்த மற்றும் கோத்தா ஆகியோரின் வழிநடத்தலின் கீழே இயங்கிய கருணா பிள்ளையான் போன்ற ஒட்டுக்குளுவினரே காரணம் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். அதாவது மக்கள் மத்தியில் கருத்தை அறிய சென்ற ஊடகவியலாளர்களுக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. கடந்த காலங்களில் அனைத்து ஆயுதக்குளுக்களிடமிருந்தும் ஆயுதங்களை களைந்துள்ளோம் என மஹிந்த தரப்பு அறிவித்திருந்த போதிலும் தமக்கு விசுவாசமாக இயங்கிய ஒட்டுக்குளுவினரிடமிருந்து ஆயுதங்கள் எவையும் முழுமையாக களையப்படவில்லை. இந்த நேரத்தில் நாட்டில் காணப்படுகின்ற அரசியல் குழப்ப நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி இவ்வாறு அப்பாவி போலீசாரை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது இதனை பிரதேச மக்கள் வன்மையாகக் கண்டிக்கிறனர் எப்படியாவது அதிகாரத்தை கைப்பற்றிவிட வேண்டும் என எண்ணும் ஒட்டுக்குளுவினரே இவ்வாறான துணிகர செயற்பாடுகளை மேற்கொள்ளுகின்றனர் எனவும் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அத்தோடு கிழக்கு மாகாணத்தில் உள்ள துயிலுமில்லங்களில் இந்த முறை மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னெடுக்க முனைந்த கருணா மற்றும் பிள்ளையான் குழுவினரை இளைஞர்கள் துயிலுமில்லங்களில் இருந்து அகற்றியமை போன்ற செயற்பாடுகள் இந்த ஒட்டுக்குளுவினரை ஆத்திரமடைய செய்துள்ளமையால் ஒரு குழப்பமான நிலையை உருவாக்க இவர்களே சதி செய்து போலீசாரை கொன்றுள்ளனர் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்

 

 

SHARE