ஆயுதம் ஏந்தாமலே பல விடயங்களை சாதித்துவிட்டது கூட்டமைப்பு: கமால் குணரத்ன

940

ஆயுதம் ஏந்தாமலேயே பல விடயங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சாதித்துவிட்டதாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு- மருதானையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர் விடுதலை புலிகளின் அமைப்புகளுக்காக செயற்பட்ட தேசிய அரசாங்கம் தற்போது மக்களிடம் வெறுப்பை மாத்திரமே பெற்றுள்ளது.

மேலும் மக்களின் ஆணையை மதிக்காமல் செயற்பட்டமையால்தான் ஐக்கிய தேசியக் கட்சி பாரிய இன்னல்களுக்கு தற்போது முகங்கொடுத்துள்ளது.

இதேவேளை எந்த கொள்கைகளுக்காக யுத்தகாலத்தில் 23 ஆயிரம் இராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தார்களோ, அதனை 16 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமைப்பு நிறைவேற்ற தேசிய அரசாங்கத்தில் முயற்சித்தனர். அதில் பலவற்றை அவர்கள் சாதகமாக நிறைவேற்றிக்கொண்டுள்ளனர்.

அந்தவகையில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஆட்சி தொடர்ந்து நாட்டில் ஏற்படுமாக இருந்தால் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கொள்கைகள் அனைத்தும் அரசியலமைப்பின் ஊடாக நிறைவேற்றப்படும்” என கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

SHARE