ஆயுதகுழுக்கள் முன்னாள் போராளிகள் மீது வீண்பழி சுமத்துகின்றன: கணேசன் பிரபாகரன்

187

வவுணதீவு பொலிஸ் அதிகாாிகள் படுகொலை தொடர்பில் முன்னாள் போராளிகள் மீது ஆயுதக் குழுக்கள் வீண்பழி சுமத்துவதாக தேசத்தின் வேர்கள் அமைப்பின் தலைவர் கணேசன் பிரபாகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், பொலிஸார் படுகொலைக்கும் தேசத்தின் வேர்கள் அமைப்புக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பில் தேசத்தின் வேர்கள் அமைப்பின் தலைவர் க.பிரபாகரன் இல்லத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

வவுணதீவில் இடம்பெற்ற பொலிஸார் படுகொலையுடன் தேசத்தின் வேர்கள் அமைப்பிற்கு தொடர்பு இருப்பதாக பல ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டுள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தொிவித்த அவர், ”தேசத்தின் வேர்கள் அமைப்பின் 3 பேர் விசாரிக்கப்பட்டோம். இதில் அஜந்தன் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டிருந்தார் நான் உட்பட ஏனைய இருவரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டோம்.

கைது செய்யப்பட்ட அஜந்தன் கொலை செய்தார் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் நிரூபிக்கப்படாத நிலையில் விசாரணைக்காக வைத்திருப்பதற்கு  கண்டணத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்று நாட்டில் சிறு குற்றச் செயல்கள் இடம்பெற்றாலும் முன்னாள் போராளிகளை குற்றம் சுமத்துவது வழக்கமான விடயமாவுள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி நிலையினால் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றிருக்கலாம் அல்லது யுத்த காலத்தில் இப்பகுதியில் செயற்பட்டு வந்த ஆயுதக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்படாத நிலையில் அதில் இருந்தவர்கள் இதனை செய்திருக்கலாம்” எனத் தெரிவித்தார்.

SHARE