குடியுரிமை பறிபோகும் நிலை ஏற்படும் மைத்திரிக்கு ஜே.வி.பி எச்சரிக்கை!

124

ஜனாதிபதியின் செயற்பாடுகள் காரணமாக அவரது குடியுரிமை பறிபோகும் நிலை ஏற்படும் என மக்கள் விடுதலை முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜித ஹேரத் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல முறை அரசமைப்பை மீறியிருக்கின்றார். தொடர்ந்தும் அத்தகைய மீறல்களில் அவர் ஈடுபட்டு வருகின்றார்.

ரணில் விக்கிரமசிங்கவை அவர் பதவி நீக்கம் செய்தது அரசமைப்புக்கு எதிரானது. மஹிந்த ராஜபக்ஷவை அவர் பிரதமராக நியமித்ததும், அரசமைப்பு மீறல். நாடாளுமன்றத்தைக் கலைத்துத் தேர்தலுக்கு உத்தரவிட்டதும் அரசமைப்பை மீறிய செயல்.

இந்த அரசமைப்பு மீறல்களால் அவர் குடியுரிமையையும் இழக்கும் நிலை ஏற்படும். ஜனாதிபதி குற்ற விசாரணைப் பிரேரணை ஒன்றை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்” என தெரிவித்துள்ளார்.

SHARE