ஜனாதிபதி இன்று மனநோயாளியாகியுள்ளார் – அநுரகுமார

72

ஜனாதிபதி இன்று மனநோயாளியாகியுள்ளார் எனத் தெரிகின்றது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

பி.பி.சி. சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையாக எடுத்த தீர்மானங்களினாலும் தான்தோன்றித்தனமான செயல்களினாலும் அவர் இன்று மனநோயாளியாகியுள்ளார் எனத் தெரிகின்றது.

ஜனாதிபதி மனநோயாளி ஆகியபடியால்தான் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விருப்பப்பட்டாலும் பிரதமர் பதவியைத் தரமாட்டேன் என்கிறார்.

அவ்வாறு அவரால் சொல்ல முடியாது. அப்படியாயின் அவர் பிரதமர் பதவியை வீட்டிலிருப்பவர்களுக்கா தரப்போகின்றார்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

SHARE