முச்சக்கர வண்டியில் சூட்சுமமாக கஞ்சா கடத்தல் முறியடிப்பு: குடும்பஸ்தர் கைது

70
முச்சக்கர வண்டியில் சூட்சுமமாக கஞ்சா கடத்தல் முறியடிப்பு: குடும்பஸ்தர் கைது
முச்சக்கர வண்டியில் சூட்சுமமாக மேற்கொள்ளப்பட்ட கஞ்சா கடத்தல் நடவடிக்கை ஓமந்தை பொலிசாரால் முறியடிக்கப்பட்டுள்ளதுடன், குடும்பஸ்தர் ஓருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தில் இருந்து கற்பிட்டி நோக்கி குடும்பம் ஓன்றுடன் பயணித்த முச்சக்கர வண்டி ஓன்றை ஓமந்தை, இறம்பைக்குளம் பகுதியில் மறுத்து பொலிசார் சோதனை செய்த போது இருக்கையின் உள்ளே சூட்சுமமான முறையில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த முச்சக்கர வண்டியை செலுத்தி வந்த சாரதி கைது செய்யப்பட்டதுடன் அவரிடம் இருந்து ஓரு கிலோ 770 கிராம் கஞ்சா மீட்கப்பட்டது. மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை, கடந்த ஓரு வாரத்தில் சொகுசு கார் மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா கடத்தல் நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டுள்ளதுடன், 8 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் ஓமந்தை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
SHARE