யாழ் நூலக எரிப்பு 38வது ஆண்டு நினைவு உலகளாவிய கட்டுரைப்போட்டி -புனித பூமி இணையத்தளம் ஊடாக அனைத்துலக மனித உரிமைச்சங்கம் (பிரான்ஸ்)நடாத்துகின்றது

832

யாழ்ப்பாணம் பொதுநூலகம் சிறீலங்கா பேரினவாதிகளால் 01.06.1981ல் எரிக்கப்பட்ட 38ம் ஆண்டு நினைவையொட்டி புனித பூமி இணையத்தளம் அனைத்துலக மனித உரிமைச்சங்கம் -பிரான்ஸ் இணைந்து உலகளாவிய ரீதியில் கட்டுரைப்போட்டி ஒன்றை நடத்தவுள்ளது.அத்துடன் தெரிவு செய்யப்படும் கட்டுரைகளை ஒரு ஆவணநூல் வடிவமாகவும் வெளியிட உள்ளது.

கட்டுரைப்போட்டியின் தலைப்பு

யாழ்நூலக பாரம்பரியமும் பயணமும்

விதிமுறைகள்
கட்டுரைகள் 550 சொற்களுக்கு மேற்படாமல் தமிழ் மொழியில் அமைதல் வேண்டும்

கட்டுரையாளர்கள் 18வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்கவேண்டும்

தமது சுயபடைப்பு என்பதை உறுதி செய்தல் வேண்டும்

கட்டுரைகள் தமிழர் தாயகமான ஈழநிலத்தின் வரலாறு பாரம்பரியம் அடக்குமுறைகள் விடுதலைப்போராட்டம் அறிவுடமை அடையாளம் போன்ற விடயங்களை உள்ளடக்கிய தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைதல் வேண்டும்

தகுதிவாய்ந்த புலமையுள்ள நடுவர்களால் கட்டுரைகள் தேர்வுக்கு உள்ளாக்கப்பட்டு முடிவுகள் இணைய வாயிலாக அறிவிக்கப்படும்

முதலாம் பரிசு-20 ஆயிரம் ரூபா
இரண்டாம் பரிசு-15ஆயிரம் ரூபா
மூன்றாம் பரிசு-10ஆயிரம் ரூபா
சான்றிதழ்களும் வழங்கப்படும்

போட்டியாளர்கள் கட்டுரைகளை 2019.03.10 நள்ளிரவுக்குள் எமது மின்னஞ்சலுக்கு அனுப்புவதுடன் புகைப்படம் மின்னஞ்சல் முகவரி தொலைபேசி எண் முகவரி என்பவற்றையும் இணைத்து அனுப்பவும்

நன்றி
புனிதபூமி இணையத்தளம்
அனைத்துலக மனித உரிமைச்சங்கம்-பிரான்ஸ்

SHARE