சமுகசேவையாளர் நாட்டுப்பற்றாளர் கணபதிப்பிள்ளை மாணிக்கம் காலமானார்

76

 

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின்பால் பற்றுறுதியும் விடுதலையின் மீது பற்றும் மிக்க சமுக சேவையாளர் திரு.கணபதிப்பிள்ளை மாணிக்கம் நேற்று காலமானர்.யாழப்பாணம் புலோலியை பிறப்பிடமாகக்கொண்ட மாணிக்கம் அவர்கள்.போரின் முக்கியமான காலத்தில் கிளிநொச்சி வன்னிப்பிரதேசத்தில் வாழ்ந்துகொண்டு.பனை வளத்துறைக்கு தனது பணியையும் விடுதலையின் முன்னெடுக்கப்பட்ட மக்கள் ஆதரவு பணிகளில் போர் எழுச்சி நிர்வாக கட்டமைப்புக்களில் பங்காற்றியதுடன் துடிதுடிப்புடன் அர்ப்பணிப்பு உணர்வோடு கடையாற்றியவர்.முள்ளிவாய்க்கால் போரின் பின்பும் அமைதியாக தனக்குள் இருந்த விடுதலையின் மீதான நேசத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டதுடன் போரில் எற்பட்ட மனித அவலத்தில் பால் கவலையும் கொண்டிருந்தார்.எப்போதும் மற்றவர்களை அனுசரித்து புன்னகையோடு பழகும் மாண்பும் கொண்டவராக மாணிக்கம் அவர்கள் திகழ்ந்தார் அவருடைய தமிழணுர்வும் நெருக்கடி காலங்களில் அவருடைய நாட்டுப்பற்று மிக்க பணியும் போற்றுதற்குரியது.இவருடைய இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணம் கட்டைப்பிராய் விளையாட்டு அரங்கு வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று நாளை 12மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் இடமபெறுமென அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளர்.

SHARE