ஏழாவது நாளாக  ஜெனிவா முன்றலில் இனப்படுகொலை சாட்சியங்கள-; நாளை மாபெரும் கவனியீர்ப்பு போராட்டம்

361

 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவையின் 40வது கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் தமிழினப்படுகொலைக்கான நீதி கோரி 2013ம் ஆண்டில் இருந்து மனித உரிமைப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் வேளைகளில் தமிழினப்படுகொலை சாட்சியங்களாக இருக்கும் நிழற்படங்களை ஜெனிவா முன்றில் சர்வதேச நீதி கோரி வைத்து வரும் மனித உரிமைச்செயற்பாட்டாளர் கஜன் இக்கூட்டத்தொடரிலும் இன்று ஏழாவது நாளாக நிழற்பட சாட்சியங்களை வைத்துள்ளார்.அதை வெளிநாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் பார்வையிட்டுச்செல்கின்றனர்.

இதே வேளை நாளை இதே ஜெனிவா முன்றலில் உள்ள முருகதாசன் திடலில் புலம் பெயர் தமிழர் அமைப்புக்களால் முன்னெடுப்படவுள்ள மாபெரும்  தமிழின நீதி கோரும் கவனயீர்ப்பு பேரணி நடைபெற இருக்கின்றது.இதில் புலம் பெயர் ஈழ உணர்வாளர்கள் தமிழ் மக்கள் அனைவரையும் கலந்து கொண்டு ஈழத்தமிழின இன அழிப்புக்கு எதிராக நீதி கோருவதுடன் சிறீலங்காவுக்கு கால அவகாசங்களை வழங்கி நீதியை தாதித்து நீதி மறுக்கும் செயற்பாட்டுக்கு ஐநா வழிவகுக்க கூடாதென்றும் வலியுறுத்த அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.