சிரியாவின் இறுதிக்கட்ட போர் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது

234

ஐ. எஸ் போராளிகளிடம் உள்ள சிரியாவின் கடைசிப் பகுதியை மீட்கும் சிரியாவின் இறுதிக்கட்ட போர் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

சிரியா மற்றும் அமெரிக்க ஆதரவு படைகள் சிரியாவில் ஐ. எஸ் போராளிகள் கைப்பற்றியுள்ள கடைசி பகுதியான பாக்ஹுஸ்சில் இன்று (திங்கட்கிழமை) கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பொது மக்களின் பாதுகாப்பு கருதி கடந்த சில நாட்களாக தாமதப்படுத்தப்பட்டிருந்த இறுதிப் போர், மக்கள் வெளியேறியுள்ள நிலையில் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் நடைபெறும் பகுதியில் இருந்து அதிகளவான ஐ.எஸ் போராளிகள் வெளியேறியுள்ளதாக அண்மையில் சிரிய படைகள் தெரிவித்திருந்தன. எனினும் ஐ.எஸ் போராளிகள் ஒருவகை தாக்குதலான ஸ்லீப்பர் செல் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக நூற்றுக்கணக்கானோரை கடத்த திட்டமிட்டுள்ளனர்” என  இத்தாலியை சேர்ந்த ஐ. எஸ் இளைஞன் நேற்று பரபரப்பு தகவலை வெளியிட்டிருந்தார்.

எவ்வாறாயினும் பலம் வாய்ந்த அமெரிக்க மற்றும் சிரியப் படைகளின் தாக்குதல் மூலம் இந்த வாரத்தில் யுத்த வெற்றி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கடுகிறது.

SHARE