காணாமல் ஆக்கப்பட்ட கணவனை தேடிய பெண்ணை பாலியல் வன்முறைக்கு முயன்ற குற்றவாளிகள்-யாழில் வாக்குமூலம்

200

பல வருடங்களுக்கு முன் கொழும்பு கொச்சிக்கடையில் வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக யாழ் ஊடகமையத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் நடத்திய ஊடக சந்திப்பில் கடத்தப்பட்டவர் ஒருவரின் அண்ணன் பல விடயங்களை அம்பலப்படுத்தினார்.

கொச்சிக்கடையில் வைத்து எனது தம்பியும் தம்பியின் மகனும் வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டார்கள்.பின்பு பல வருடங்களாக யுத்த காலப்பகுதியிலும் அவர்களைதேடி எனது தம்பியின் மனைவி ஜனாதிபதி உட்பட பல இடங்களுக்கு கடிதம் எழுதினார்.ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எதேச்சையாக கடந்த சில வருடங்களுக்கு முன் கொழும்பில் கடத்தப்பட்ட பதினொரு பேர்களில் எனது தம்பியும் மகனும் உள்ளடங்குகின்றனர் என்ற விடயம் தெரியவந்தது.எனது அவர்களை தேடி பட்டதுன்பம் சொல்லில் அடங்காதவை என அவர் தெரிவித்தார்.

SHARE