கிளிநொச்சி நகரில் நுழைந்தது மார்ச்16 தமிழினநீதி கோரும் போராட்ட எழுச்சி ஊர்தி

183

எதிர்வரும் மார்ச்16ம் நாள் யாழ்ப்பாணத்தில் வடக்குகிழக்கு பல்கலைக்கழக மாணவ சமுதாயத்தின் ஏற்பாட்டில் தமிழின நீதி கோரும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி இடம்பெறவுள்ள நிலையில் அச்செய்தியை தாங்கியபடி மக்களை எழுச்சியடையச்செய்யும் வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட எழுச்சி ஊர்தி யாழ்ப்பாணத்தை கடந்த இன்று கிளிநொச்சி நகரில் நுழைந்துள்ளது.

இன்று காலை கிளிநொச்சி நகரில் உள்ள சந்தை வர்த்தகநிலையங்கள் பேரூந்து நிலையம் மக்கள் கூடும் இடங்களில் ஊர்தி பயணித்தபடி பல்கலைக்கழக மாணவர்கள் துண்டுப்பிரசுரங்களை வழங்கியுள்ளனர்.தொடர்ந்து ஊர்தி கிளிநொச்சி கிராமங்களில் பயணிக்கின்றது.

SHARE