மார்ச்16 போராட்டத்தின் எழுச்சி ஊர்தி வன்னியின் நிலத்தில் பயணம் வவுனியாவை அடைகின்றது

263

எதிர்வரும் மார்ச்16ல் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தமிழின நீதி கோரும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு பேராதரவை திரட்டும் பொருட்டு தமிழின வரலாற்று உணர்வின் அடிப்படையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட எழுச்சி ஊர்தி இன்று யாழ்ப்பாணத்தில் கிளிநொச்சி நகரை வந்தடைந்து பின் வட்டக்கச்சி முரசுமோட்டை புளியம்பொக்கணை தருமபுரம் விசுவடு ஊடாக புதுக்குடியிருப்பு பரந்தன் சாலையில் பயணித்து தற்பொழுது வவுனியாவை நோக்கிச்சென்றுள்ளது.

எழுச்சி ஊர்தி பயணிக்கும் வீதியெங்கும் மாணவர்கள் மக்கள் மார்ச் 16 தமிழின நீதி கோரும் போராட்டத்திற்கான தங்கள் தார்மீக ஆதரவை மிகப்பெரிய அளவில் வழங்கி வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.ஊர்தியோடு பல்கலைக்கழக மாணவர்கள் நாள்முழும் கால் நடையாக பயணித்து சகல இடங்களிலும் துண்டுப்பிரசுரங்களை வழங்கிவருகின்றனர்.

SHARE