கிளிநொச்சியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

33

 

கிளிநொச்சி இரணைமடு சந்தியை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு சம்பவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது மோதியதில், குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி அக்கராயன் பகுதியைச் சேர்ந்த சந்தியாபிள்ளை பீற்றர் இமானுவேல் (66 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக லொறியின் சாரதியைக் கைது செய்துள்ள கிளிநொச்சி பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

SHARE