இந்திய விமானி அபிநந்தனிடம் விசாரணை நிறைவு

48

 

இந்திய விமானி அபிநந்தனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை, நிறைவடைந்துள்ள நிலையில் அவரை நான்கு வாரங்கள் மருத்துவ விடுப்பில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய இராணுவ முகாமை தாக்க வந்த பாகிஸ்தான் எப்.16 போர் விமானத்தை விரட்டிச் சென்று அதனை சுட்டு வீழ்த்திய தமிழக வீரர் அபிநந்தனை, பாகிஸ்தான் இராணுவம் அண்மையில் சிறைப்பிடித்து விடுதலை செய்திருந்தது.

இவ்வாறு பாகிஸ்தான் இராணுவத்திடம் சிறைப்பட்டபோது அவருக்கு நேர்ந்த துன்புறுத்தல்கள் மற்றும்  பாகிஸ்தானிடம் தெரிவித்த தகவல்கள்  குறித்து இந்திய விமானப் படையின் உயர்மட்ட விசாரணைக் குழு தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில் குறித்த விசாரணைகள் நேற்றுடன் (வியாழக்கிழமை) நிறைவடைந்த நிலையில் மருத்துவ விடுப்பில் ஓய்வெடுக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் விடுமுறையை கழிக்க தெரிவு செய்த இடம் குறித்து சரியான தகவல் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

SHARE