தமிழர்களின் ஆதரவு கோட்டாவிற்கு கிடையாது – ரஞ்சன் ராமநாயக்க

35

தமிழர்களின் ஆதரவு கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கிடையாது என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘பொது அணியினர் ஜனாதிபதி தேர்தலுக்கு எவ்வாறான வேட்பாளரை களமிறக்கினாலும் அவர் நிச்சயமாக வெற்றிபெறப்போவதில்லை.

கோட்டாவால் 50 வீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாது. தமிழர்கள் அவருக்கு ஆதரவினை வழங்க மாட்டார்கள்.

தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைத்து இன மக்களின் விருப்பினை பெற்றுக்கொள்ள கூடிய வேட்பாளரையே நாங்கள் இம்முறை வேட்பாளராக களமிறக்குவோம்’ என தெரிவித்துள்ளார்.