மட்டக்களப்பு கூத்துக்கலைஞர் கந்தையா சோமசுந்தரம் மறைந்தார்

186

மட்டக்களப்பு துறைநீலாவணையை சேர்ந்த கூத்துக்கலைஞர் கந்தையா சோமசுந்தரம் தனது 78வது வயதில் காலமானார்.கலைப்பணிக்கு தன் வாழ் நாளில் சிறந்த சேவையை இவர் ஆற்றியுள்ளார்.கரகாட்டத்தில் இவர் சிறந்த தேர்ச்சி பெற்றவராக இருந்தார்.மட்டக்களப்பின் ஆலயங்கள் பாடசாலைகள் அரச திணைக்களங்கள் கலை அரங்குகளில் இவர் தனது கலையை வெளிப்படுத்தி வந்துள்ளார்.இவரது கலைச்சேவையை பாராட்டி கலாபூசணம் கலைத்தென்றல் வித்தகர் விருது என்பன இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.ஈழத்தின் கிராமிய கலைக்கு இவர் சிறந்த பணி ஆற்றியதுடன் தமிழ் தேசியத்தின் மீதும் பற்றுடையவராக திகழ்ந்துள்ளார்.

SHARE