ஈழத்தை நேசித்த இயக்குநர் மகேந்திரன்

507

 

தமிழ் திரையுலகின் பெரும் திருப்புமுனைகளை தந்த இயக்குநர்களில் ஒருவரான மகேந்திரன் காலமாகிவிட்டார் என்ற சேதி அறிந்து ஈழத்தமிழினம் மிக்க துயர் அடைந்துள்ளது.தொப்பூள் கொடி உறவுகளான தமிழகத்தின் பண்பாட்டு கலை தொடர்புகளில் இயக்குனர் மகேந்திரனும் ஒரு பாலமாக இருந்துள்ளார்.ஈழத்து திரைத் துறையில் வளர நினைக்கின்ற கலைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்துள்ளார்.அதுமட்டுமல்ல நேரடியாக கோர்க்காலத்தில் வன்னி நிலத்துக்கு தன் மகன் ஜானுடன் வந்து உருவாக்கப்படும் புiதிய திரைப்பட்ட வளர்ச்சிக்கு ஆலோசனைகள் வழங்கியதுடன் தன் மகனின் முழுப்பங்களிப்பையும் வழங்க ஏதுவாக இருந்துள்ளார்.எல்லாவற்றுக்கும் மேலாக தமிழீழ தேசிய தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களை சந்தித்ததுடன் இருவரும் மனம்விட்டு பேசியிருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.இயக்குனர் மகேந்திரன் அவர்களுக்கு தமிழீழ மக்கள் சார்பில் புனித பூமி தனது ஆழ்ந்த வணக்கங்களை தெரிவித்துக்கொள்கின்றது

 

திரைப் படைப்புகள்

 1. 1978முள்ளும் மலரும்
 2. 1979உதிரிப்பூக்கள்
 3. 1980பூட்டாத பூட்டுகள்
 4. 1980: ஜானி
 5. 1980: நெஞ்சத்தை கிள்ளாதே
 6. 1981நண்டு
 7. 1982மெட்டி
 8. 1982: அழகிய கண்ணே
 9. 1984கை கொடுக்கும் கை
 10. 1986கண்ணுக்கு மை எழுது
 11. 1992ஊர்ப் பஞ்சாயத்து
 12. 2006சாசனம்

இதர படைப்புகள்

 1. அர்த்தம் (தொலைக்காட்சி நாடகம்)
 2. காட்டுப்பூக்கள் (தொலைக்காட்சி நாடகம்

கதை/வசனம்/திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்

 1. தங்கப்பதக்கம் – கதைவசனம்
 2. நாம் மூவர் – கதை
 3. சபாஷ் தம்பி – கதை
 4. பணக்காரப் பிள்ளை – கதை
 5. நிறைகுடம் – கதை
 6. திருடி – கதை
 7. மோகம் முப்பது வருஷம் – திரைக்கதை வசனம்
 8. ஆடு புலி ஆட்டம் – கதை வசனம்
 9. வாழ்ந்து காட்டுகிறேன் – கதை வசனம்
 10. வாழ்வு என் பக்கம் – கதை வசனம்
 11. ரிஷிமூலம் – கதை வசனம்
 12. தையல்காரன் – கதை வசனம்
 13. காளி – கதை வசனம்
 14. பருவமழை -வசனம்
 15. பகலில் ஒரு இரவு -வசனம்
 16. அவளுக்கு ஆயிரம் கண்கள் – கதை வசனம்
 17. கள்ளழகர் -வசனம்
 18. சக்கரவர்த்தி – கதை வசனம்
 19. கங்கா – கதை
 20. ஹிட்லர் உமாநாத் – கதை
 21. நாங்கள் – திரைக்கதை வசனம்
 22. challenge ramudu (தெலுங்கு) – கதை
 23. தொட்டதெல்லாம் பொன்னாகும் (தெலுங்கு) -கதை
 24. சொந்தமடி நீ எனக்கு -கதை வசனம்
 25. அழகிய பூவே – திரைக்கதை வசனம்
 26. நம்பிக்கை நட்சத்திரம் -கதை வசனம்