மேஜர் பசீலன் அவர்களின் தாயார் நல்லையா தங்கம்மா இயற்கை எய்தினார்!

74

தமிழிழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால தளபதிகளில் ஒருவரான மேஜர் பசீலன் அவர்களின் தாயார் நல்லையா தங்கம்மா அவர்கள் சுகவீனம் காரணமாக 3ம் வட்டாரம் முள்ளியவளை முல்லைத்தீவு தமிழீழம் என்ற முகவரியில் 05/04/2019 இன்று சாவடைந்துள்ளார்.

மேஜர் பசீலன் அவர்களின் நினைவாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பசீலன் 2000ம் என்ற எறிகணை செலுத்தி தமிழீழ சமர்க்களங்களை அதிரவைத்ததுடன்.புலிகளின் உள் நாட்டு தயாரிப்பின் செயற் திறனை உலகிற்கு கோடிட்டு காட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கதது.

மேஜர் பசீலன் அவர்களின் தாயார் தமிழீழ மாவீரர் நாளில் கடந்த 2017 ‘2018 ல் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுச் சுடரினை ஏற்றி வைத்த பெருமைக்குரியராகின்றார்.