சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து விலகியது மலேசியா!

61

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குறித்த ரோம் உடன்படிக்கையிலிருந்து விலகிக்கொள்ளவதாக மலேசியா அறிவித்துள்ளது.

அரச குடும்பம் மற்றும் எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு காரணமாகவே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில், மலேசியா கடந்த மாதம் இணைந்துகொண்டது.

எனினும், மலேசிய அரச குடும்பத்தினருக்கு, சட்ட நடவடிக்கைகளிலிருந்து விலக்குக் கிடைக்காது என்ற காரணத்தினால் அதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இதனை அடுத்து, அமைச்சரவையின் அனுமதியுடன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குறித்த ரோம் உடன்படிக்கையிலிருந்து விலகிக்கொள்ளவதாக மலேசியா அறிவித்துள்ளது.