பாகிஸ்தானால் இந்திய மீனவர்கள் விடுதலை

214

நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 100 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 26-ம் திகதி, காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இயங்கி வந்த தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இதனை தணிக்கும் விதமாக, பாகிஸ்தான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 360 பேரை விடுவிப்பதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்தது.

இதற்கமைய கடந்த 7-ம் திகதி அந்நாட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 100 மீனவர்களை பாகிஸ்தான் அரசாங்கம் விடுதலை செய்தது.

இந்நிலையில், சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 100 மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளது.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் வாஹா எல்லையில் இந்திய இராணுவ அதிகாரிகளிடம் இன்று(திங்கட்கிழமை) ஒப்படைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, எஞ்சியுள்ள மீனவர்களை எதிர்வரும் 22 மற்றும் 29 ஆகிய திகதிகளில் விடுவிக்கப்படுவார்கள் என பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

SHARE