போதைப் பொருளுடன் மூன்று பேர் கைது

163

போதைப் பொருள் வைத்திருந்த மூவர் இன்று அதிகாலை கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 33 மற்றும் 38 வயதுடைய மூன்று பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டதுடன், ஐஸ் போதைப் பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர். 

கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

SHARE