பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: முதலிடத்தில் திருப்பூர்

58

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தற்போது  வெளியிடப்பட்டுள்ளது. இதில்  திருப்பூர் 95.37 சதவிகித அளவில் தேர்ச்சிப்பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.

ஈரோடு 95.23 சதவிகித அளவில் தேர்ச்சி பெற்று 2ஆம் இடத்தையும், பெரம்பலூர் 95.15 சதவிகித அளவில் தேர்ச்சி பெற்று 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 1,281 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 7082 பள்ளிகளை சேர்ந்த 8 இலட்சத்து 88 ஆயிரம், பிளஸ் 2 மாணவர்கள் கடந்த மாதம் பரீட்சை எழுதினர்.

அதனைத் தொடர்டந்து மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த வாரம் நிறைவடைந்தன. இந்நிலையிலேயே பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

அந்தவகையில் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவிகள் 93.64 சதவிகித தேர்ச்சியும், மாணவர்கள் 88.57 சதவிகித தேர்ச்சியும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE