சர்வமத குருமார் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல் மகஜரும் கையளிப்பு

69

சர்வமத குருமார் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல் மகஜரும் கையளிப்பு
வவுனியா மாவட்ட சர்வமத குருமார் இன்று வவுனியாஅரசாங்க அதிபரை சந்தித்து மாவட்டத்தின் பாதுகாப்பு மற்றும் மக்களுக்கிடையிலான நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர்.
மாவட்ட செயலகத்தின் அரசாங்க அதிபர் அலுவலகத்தினுள் இடம்பெற்ற இக் கலந்துரையாடிலில் நான்கு மதத்தலைவர்கள் மற்றும் சமாதான பேரவையின் மத நல்லிணக்க குழுவினரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது சர்வமத குழுவினரால் மகஜரொன்றும் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டதுடன் மத நல்லிணக்கத்திற்கு சர்வமத குழுவினரால் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தனர்.

SHARE