வவுனியாவில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனைக்காப்பாற்ற உதவுங்கள்.

313

வவுனியாவில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனைக்காப்பாற்ற உதவுங்கள். 
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் ஆரம்பப்பிரிவில் தரம் ஜந்தில் கல்வி கற்று கடந்த வருடம் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 176 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த வவுனியா கோவில்குளம் பகுதியில் வசித்துவரும் சிவநேசன் விதுர்சன் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் புற்றுநோயினால் பீடிக்கப்பட்டு மஹாரகம தேசிய புற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கடுமையான புற்று நோய்த்தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாகவும் உடனடியாக இந்தியாவிலுள்ள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்க வேண்டிய ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
புற்றுநோயினால் பீடிக்கப்பட்ட சிறுவனின் நோயைக்குணப்படுத்த இந்தியாவிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்கு 50 ஆயிரம் அமெரிக்கா டொலர் பணம் தேவையாக ஏற்பட்டுள்ளது 40ஆயிரம் டொலர் வைத்திய செலவுகளுக்கும் 10ஆயிரம் டொலர் ஏனைய தேவைகளுக்கும் செலவாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தமது குடும்பம் விவசாயத் தொழிலினை மேற்கொண்டுவரும் நிலையிலுள்ளதால் தமக்கான உதவியை வழங்க தனவந்தர்கள் நன்கொடையாளர்கள் முன்வருமாறு கோரியுள்ளனர். 
பாடசாலை கல்வியில் திறமையாகவும் சித்திரம் வரைதலில் முன்மாதிரியாகவும் திறமைகளை வெளிப்படுத்தும் 11வயதுடைய சிறுவனைக்காப்பாற்றி உதவி புரியுமாறும் உருக்கமாக குடும்பத்தினர் பண உதவியைக் கோரியுள்ளனர். தமது குடும்ப வருமான நிலைமையை உணர்ந்து தமது பிள்ளையை காப்பாற்ற இயலுமானவர்கள் உதவிக்கரம் நீட்டுமாறும் கீழ் காணப்படும் இலக்கங்களுடன் தொடர்பினை ஏற்படுத்துமாறு மேலும் தெரிவித்துள்ளனர்.
பணவைப்புக்கான சிறுவனின் அக்காவின் கணக்கு இலக்கம் கிவாசினி சிவநேசன் மக்கள் வங்கி வவுனியா 040 2 001 20090263 
தொலைபேசி இலக்கம் 009476 0620745

SHARE