ஈழச்சிறார்களின் இதயவேட்கை மே18

394

புலம்பெயர்ந்து மண்ணை பிரிந்த மைந்தர்கள் பெற்றெடுத்த குழந்தைகள் தாய் மண்ணையும் தாய் மண்ணின் நினைவுகளையும் நெஞ்சில் பற்றை வைத்து படரும் ஒரு தருணத்தில் மே18 வருகின்றது.மேய்ப்பனற்ற மந்தைகளாய் ஆளுக்கொரு திசையில் உதிரிகளாக்கபட்டுள்ள ஈழத்தமிழர்களுக்கு இந்த சிறார்கள் இதயத்தினால் பேசும் வார்த்தைகள் ஒன்று இரண்டு எனினும் அது அவர்களின் வாழ் நாளில் நிலைத்திருக்கும் இன்று இவர்களின் வாயில் உதிர்ந்த வார்த்தைக்கு வளர்ந்து சிந்திக்கத் தொடங்கும்போது திரும்பிப்பார்ப்பார்கள் தங்கள் வார்த்தைகளுக்கு அர்த்தம் கிடைத்ததா என. அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுக்கவேண்டியது பெரியவர்களின் கைகளில் உள்ளது.

SHARE