4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம்!

99

4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் ஒன்று எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு அருகே இந்த கல்லறைத் தோட்டம் கண்பிடிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

எகிப்து தலைநகர் கெய்ரோ அருகே உள்ள கீசா பீடபூமியின் தென் பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதன்போது சுமார் 4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் ஒன்றை அவர்கள் கண்டுபிடித்தனர்.

இந்த கல்லறை தோட்டத்தில் அந்த கால மன்னராட்சியில் முக்கிய பொறுப்புகள் வகித்த பெனுய் கா மற்றும் நிவை ஆகிய இருவரின் கல்லறைகள் உள்பட பல்வேறு காலகட்டங்களில் உயிரிழந்தவர்களின் கல்லறைகளும் இடம்பெற்றுள்ளதாக தொல்லியல்துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பழமையான கல்லறை தோட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டிகள், சுண்ணாம்பு கற்களால் செய்யப்பட்ட ஒரே குடும்பத்தின் சிலைகள் மற்றும் விலங்குகள் உருவம் ஆகியவை கண்டறியப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE