விடுதலைப்புலிகளுக்கான தடையை நீடித்தது மத்திய அரசு!

145

இந்தியாவில் விடுதலைப்புலிகளுக்கான தடையை மேலும் 5 வருடங்களுக்கு நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி குறித்த அமைப்பு மீதான தடையை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு வரை உள்துறை அமைச்சகம் நீடித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

விடுதலைப்புலிகளின் ஆதரவு இயக்கங்களின் காரணமாக இந்தியாவின் அமைதிக்கும் , இறையான்மைக்கும் குந்தம் ஏற்ப்படகூடும் என்ற அச்சத்தின் காரணமாகவே இந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்தும் முன்னெடுத்துவருவதாகவும் குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவு அதிகரித்து வருவதால் தடைநீடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

SHARE