மாணவர்கள் விடுதலைகோரி யாழ் பல்கலை மாணவர்கள் போராட்டம்

54

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீடசிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகியமூவரையும் விடுவிக்கக் கோரி மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில்ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகமுன்றலில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம்இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்குஇடம்பெற்றது.

மாணவர்கள் உள்ளிட்ட மூவருக்கும்இடையிலான வழக்கு நாலைவியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான்நீதிமன்றில் இடம்பெறவுள்ள நிலையில் சட்டமா அதிபர் மூவரின் விடுதலை தொடர்பில்உரிய அறிவுறுத்தலை வழங்கவேண்டும்என்று இந்தப் போராட்டத்தில் மாணவர்கள்வலியுறுத்தியுள்ளனர்

SHARE