பருத்தித்துறையில் இராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகளுடன் 11 பேர் கைது

65

பருத்தித்துறையில் இராணுவச் சீருடைகளை ஒத்த ஆடைகளுடன் பதினொரு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறையில் புடவைக் கடைகள் மற்றும் தையல் நிலையங்கள் ஆகியன நேற்று (செவ்வாய்க்கிழமை) சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போதே குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த தேடுதலின்போது இராணுவம் மற்றும் விசேட அதிரடி படையினரின் சீருடைகளை ஒத்த வடிவமைப்புடைய துணிகளிலான ஆடைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. அதில் சிறுவர்களின் ஆடைகளும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, யாழ். நகரில் நடத்தப்பட்ட தேடுதல்களின்போது பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆடைகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

SHARE