எங்களை சோதிக்க வேண்டாம் – அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

133

எங்களை தொடர்ந்தும் சோதிக்க வேண்டாம் என அமெரிக்காவுக்கு பிரித்தானியாவுக்கான ஈரானிய தூதுவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்கை நியூஸ் செய்தி சேவைக்கு இன்று (புதன்கிழமை) மத்திய கிழக்கில் ஏற்படவுள்ளதாக கூறப்படும் போரின் வாய்ப்பைப் பற்றி வழங்கிய பிரத்தியேக செவ்வியில்லேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

120,000 துருப்புக்களை மத்திய கிழக்கு நாடான ஈரானுக்கு அனுப்பவுள்ளதாக தொடர்ந்தும் அமெரிக்கா அச்சுறுத்தல் விடுத்து வருகின்றது.

இந்த நிலையில் தமது பிராந்தியத்தில் ஏற்படக்கூடிய சம்பவங்களுக்கு ஈரானிய ஆயுதப் படைகள் தயாராக இருப்பதாகவும் ஹமித் பாயிடிநஜட் கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகத்தில் இருந்து அதிகரித்து வரும் சவாலை அடுத்து போருக்கு தனது நாட்டின் தயார் நிலை குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை மத்திய கிழக்கு நாடான ஈரானுக்கு எதிராக நடவடிக்கைக்காக 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட துருப்புக்களை அனுப்பும் செய்தியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE